இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*நட்சத்திரம்* : அத்வைதம் - 'உயர்ந்த' ஞானம் ?!

Go down

*நட்சத்திரம்* : அத்வைதம் - 'உயர்ந்த' ஞானம் ?! Empty *நட்சத்திரம்* : அத்வைதம் - 'உயர்ந்த' ஞானம் ?!

Post by Admin Sat Oct 24, 2009 4:55 pm

இடம் காலாடி ( ஆதிசங்கரர் பிறந்த ஊர்)

ஒரு இனிய பொழுதின் மாலை, ஆசரமகுடிலுக்கு வெளியில் உள்ள புலிதோல் மீது சங்கரர் அமர்ந்திருக்கிறார்
சிஷ்ய கோடிகள் அவருக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்

சங்கரர் நிஷ்டை களையும் நேரம் வந்தது, மெதுவாக கண்கள் திறந்தது, சிறிது நேர மெளனத்திற்கு பிறகு

சங்கரர்
: ப்ரியமான சிஷ்யர்களே, நான் இன்று உங்களுக்கு பிரம்ம ஞானத்தை சொல்லப்
போகிறேன். கவனமாக கேளுங்கள்.உங்களுக்கு தெளிவு ஏற்படவில்லை என்றால் கேள்வி
எழுப்புங்கள்

சிஷ்யர்கள் : லோக குருவான ஆச்சாரியார் அவர்களே அப்படியே ஆகட்டும்.

சங்கரர்
: கர்மயோகம் அனைத்தையும் கற்று தேர்ந்து...கூடுவிட்டு கூடு பாய்ந்து
காமத்தையும் அறிந்த நான் உலக வாழ்வின் தன்மைகள் முழுதும் அறிந்து
கொண்டேன். எனது ஆழ்ந்த யோகத்தின் வழி பிரம்ம ஞானத்தை தெரிந்து
கொண்டிருக்கிறேன். பிரம்மத்தை அடைவதே நம் நோக்கம். பிரம்மம் என்பது என்ன ?

சிஷ்யர்களில்
ஒருவரான சுரேஸ்வரர் : சுவாமிஜி ... ஆச்சாரியார் அவர்களே... பிரம்மம் பற்றி
நம் வேத நூல்கள் கூட சொல்கிறது. பிரம்மம் என்பது ஆகயம் என்று
சொல்கிறார்கள், சூரியன் என்று சொல்கிறார்கள். எங்களுக்கெல்லாம் பிரம்மம்
பற்றிய புரிதல் குழப்பமாகவே இருக்கிறது.

சங்கரர் : அது ஒருவகையில்
சரி ஆனால். பிரம்மம் என்பது எங்கும் நிறைந்திருப்பது, பிரம்மம் தவிர வேறு
எதுவுமே இல்லை. பிரம்மம் நிரந்தரமானது, அழிவற்றது பிரம்மமே உண்மை, தினம்
மாறும் இவ்வுலகமும், இவ்வாழ்கை எல்லாமும் மாயம். ஒருவன் பிரம்மத்தை
அடைவதன் மூலம் பிறப்பற்றவனாகிறான். துன்பம் மிகுந்த உலகவாழ்கையில் இருந்து
முற்றிலும் விடுதலை அடைகிறான். பிரம்மத்தை அடைதல் என்பது நீயே பிரம்மாக
மாறிவிடுவாது. எங்கும் இருக்கும் பிரம்மத்தில் நுழையும் வாசல் இருக்கிறது.
வெளியேறும் வழியில்லை. எனவே பிரம்மத்தை அடைந்தவன் பிறப்பறுக்கிறான்.
இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டுமானால் 'ஏகத்துவம்' ஒரேநிலை, அசைவற்ற
நிலை, உலகியலுக்கு அப்பாற்பட்ட இறுதி நிலை.

சுரேஸ்வரர் : ஓரளவுக்கு புரிகிறது. ஆச்சாரியாரே... பிரம்மத்தை அடைவது எப்படி ?

சங்கரர்
: எங்குமாகி இருக்கும் பிரம்மத்தின் மீது பற்றுதல் கொள்ள வேண்டும்,
பிரம்மமே உயர்வு என்று எப்பொழுதும் நினைக்க வேண்டும். பிரம்மம்
பிறப்பறுக்கிறது என்று உலகத்தாருக்கு உணர்த்த முயலவேண்டும். எந்த
வருணத்த்தை சேர்ந்தவனாக இருந்தாலும் பிரம்மத்தை அடைவதை குறிக்கோளாக கொண்டு
அதை அடைபவனே பிராமணன் ஆகிறான். உலகில் உள்ள தத்துவ ஞானங்களிலெல்லாம்
உயர்நது பிரம்ம ஞானமே, மற்ற ஞானங்கள் வாழ்வியலுக்கும், இறையியலையும்
பேசுகின்றன. பிரம்ம ஞானம் மட்டும் தான் விடுதலை அளிக்கிறது இதுவே அத்வைதம்
அதாவது இரண்டற்ற ஒரு நிலை.

சுரேஸ்வரர் : ஆச்சாரியாரே...குடும்பஸ்தர்களிடம் சென்று பிரம்மம் பற்றி பேசினால் அவர்கள் புரிந்து கொள்வார்களா ?

சங்கரர்
: அதைப் பற்றிய அச்சங்கள் தேவையில்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது,
புத்தர் கொள்கை பரவிய பிறகு வீழ்ந்த பக்தி மார்கங்களை அதாவது சனாதன
தர்மத்தை எழுச்சி பெறவைக்க வேண்டும். புத்தர் கொள்கையில் முக்கியமாக
மக்களை கவருவது 'நிர்வாண' தத்துவம் - ஏதுமற்ற தன்மை மற்றும் ஆசைகளை
துறப்பது. பிரம்மம் என்பது ஏதுமற்றதல்ல...எல்லாமுமாக இருப்பது... நாம்
ஆசைகளை துறக்க வேண்டாம் மாறாக ஆசைகளை வெறுப்போம். எந்த அளவுக்கு உலக
வாழ்கையென்னும் மாயையை வெறுக்க முயற்சிக்கிறோமோ அல்லது பற்றற்று
இருக்கிறோமோ ... அந்த அளவுக்கு நாம் பிரம்மத்தை நெருங்குகிறோம். நாம் உலக
வாழ்கையை வெறுத்தவர்களாக உலகாருக்கு காட்ட வேண்டும். அதே சமயத்தில்
பக்திமார்கத்திற்கு வெளியில் வந்து இதை செய்ய முடியாது. மக்களை முதலில்
பெளத்த கொள்கைகளிலிருந்து சனாதன தருமத்திற்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும்.
அதன் பிறகு பிரம்மம் பற்றிய பாடங்களையும், சூத்திரங்களையும் அவர்களுக்கு
தெளிவிப்போம். தற்பொழுது சிலைவழிபாட்டை கேலி செய்த பெளத்தர்கள்
சமணர்கள்....புத்தரையும், சமணரையும் சிலையாக வடித்திருக்கிறார்கள், சனாதன
தருமத்தின் இந்திரனை ஏற்றுக் கொண்டு இந்திரவிழா நடத்துக்கிறார்கள் ...
மடங்களை விட்டு விட்டு பெளத்த சன்யாசிகள் ஆடம்பர கோவில்களை
அமைத்திருக்கிறார்கள் . இதன் மூலம் மக்கள் சிலை வழிபாட்டின் மீது நாட்டம்
கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. நாமும் சிலை வழிப்பபட்டின் மீது மக்கள்
வைத்திருக்கும் ஈடுபாட்டை பயன்படுத்திக் கொள்வோம்.

சுரேஸ்வரர் :
நல்லது ஆச்சாரியார் அவர்களே...நங்களெல்லாம் பிரம்ம நிலையை அடையும்
பிராமணர்கள் என்ற உறுதி மொழியை இன்று முதல் ஏற்கிறோம். தங்கள் சொல்லும்
பிரம்மமே உயர்வானது.

மற்ற சிஷ்யர்களும் அவ்வாறே, பிரம்மமே உயர்வானது !. பிரம்மமே உயர்வானது !! என்று குரல் எழுப்புகிறார்கள்

சங்கரர்
: முக்கியமாக நீங்கள் நினைவு கொள்ள வேண்டியது, உலக வாழ்கையை வெறுக்க
வேண்டும், எந்த ஒரு பொருளையோ, விலங்கையோ, பிரம்மத்த்தை ஏற்காத அல்லது
புரிந்து கொள்ளாதவர்களை 'தீண்டத்தாகதவர்களாக' நினைத்து மனதளவில்
நெருங்காமல் இருக்க வேண்டும்.

சுரேஸ்வரர் : மிகவும் நன்று ஆச்சாரியார் அவர்களே...அப்படியே செய்கிறோம்

சங்கரர்
: நமக்கு முக்கிய வேலை இனிமேல் தான் இருக்கிறது. பாரத தேசத்தின் நான்கு
திக்குகளிலும் சங்கர மடங்களை நிறுவப்போகிறேன். அதன் மூலம் முதலில்
சனாதனத்தை வளர்க்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். நம் பஜகோவிந்தமும்,
செளந்தர்யலகரியும் சிலைவழிபாட்டுக்கு உதவி பக்தி மார்கத்தாரிடம் தாக்கத்தை
ஏற்படுத்தி மக்கள் சநாதனத்துக்கு திரும்புவார்கள். அதிலிருந்தபடியே அத்வைத
தத்துவமான பிரம்ம தத்துவத்தை போதிப்போம்

********

நூற்றாண்டுகளுக்கு பிறகு, சுரேஸ்வர் வழிவந்த அவர் சந்ததியின்

ஒருபிரிவினர்
: "நாங்கள் ஆதி சங்கரர்...சுரேஸ்வரர் வழிவந்த பிராமணர்கள், பிரம்மத்தை
உணர்ந்தவர்கள், பிரம்மம் பற்றிய அறிவில்லாதவர்களை நாங்கள் தீண்டுவதில்லை".

அதன் பிறகு மனு(அ ?) தர்மம் இயற்றபெற்றது

1000 ஆண்டுகளுக்கு பிறகு
********

"நாங்கள் பிராமணர்கள், பிரம்ம ஞானத்தின் வழி பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பிரமணர் அல்லாதோர் அதாவது தீண்டத்தாகதவர்கள்

******
2000 ஆண்டிலும்

இன்னும் கூட சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .... தீண்டாமை !

டிஸ்கி :

தீண்டாமை தோன்றிய காரணம் என்ன ?

மேலே
சொன்ன 'பிரம்ம ஞானம்' அத்வைதம் தான் அதற்கு மூலம் என தெரியவருகிறது. ஒரு
சில புத்தகங்களில் எழுதி இருந்த குறிப்புகளை வைத்து எழுதியது இது.
பிரம்மத்தை அடைவது பற்றிய பல்வேறு விளக்கங்களைப் பார்த்த பின் எனது
கருத்து பிரம்மத்தை அடைந்தவன் நிலை என்பது இருட்டு அறையில் இறந்த பிணம்
எவருக்கு தெரியாமல் நிரந்தரமாக அப்படியே கிடப்பதற்கு ஒப்பானது என்று
விளக்கம் சொன்னால் கூட அது சரியாகக் கூட இருக்கலாம் ஏனெனில் பிரம்மத்தை
அடைவது என்பது பிறப்பறுத்த (செயல்படாத) மீளாத நிலை. இதற்கு மாற்றாக
பிரம்மத்தை அடைந்த பலாபலன் அத்வைதத்தில் இருந்தால் அதுவும் இப்படித்தான்
இருக்கும் ஆனால் அதற்கு மேற்பட்டதாக இருக்க முடியாது.

அவரது
நோக்கம் அனைத்தையும் ஒன்றாக பார்க்கும் ஒரு நல்ல நோக்கமே. உலக வாழ்கை
என்பது மாயை என்று சொன்னார். ஆனால் அத்வைதிகள் அல்லது அதில் நம்பிக்கை
உடையவர்கள் மற்ற மனிதர்களை தீண்டக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. அது
உயர்ந்த ஞானம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அதைப்பற்றி எந்த அனுபவமுமே
இல்லாமல் பின்னாளில் அதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் அதுவே உயர்ந்தது
என்ற வீன் பெருமையும், மற்றவை தாழ்ந்தவை என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.
தீண்டாமை என்ற கொள்கை என்பது பின்னாளில் திரிக்கப்பட்டவைதான் அதற்கு
முன்பு சநாதன தருமத்தினர் குழுக்காளாக இருந்தலும் பிறரிடம் தீண்டாமை
பாராடியதற்கான இருந்தற்கான குறிப்புகள் கிடைக்கவில்லை. சங்கரரோ, அவரின்
மாணாக்கர்களோ தீண்டாமை பாராட்டுவதற்காக அத்வைதக் கொள்கையை உண்டாக்கவில்லை.

எப்படியோ
பிறந்துவிட்டோம்... அதன் கடமையான வாழ்க்கையை மகிழ்வுடன் நேசிப்போம்.
புரியாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றை உயர்வாக காட்டிக் கொண்டே போனால்
'ஏற்றத் தாழ்வுகளின்' தோற்றமாக அது அமைந்துவிடும். சமூக நலன் சாராத
தத்துவங்கள் எவையும் நல்வாழ்கைக்கு உதவாது என்றே கருதுகிறேன்.


ஆக்கம் எழுத உதவி குறிப்பு நூல் : "இந்திய கதை - ஏகம், அநேகம்,சாதியம்" - ஆசிரியர் நா.முத்துமோகன்"
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 37

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum