இந்துசமயம்

எளிதாகத் தீர்வு காணப்படும் - ஸ்ரீ அரவிந்தர்

Go down

எளிதாகத் தீர்வு காணப்படும் - ஸ்ரீ அரவிந்தர் Empty எளிதாகத் தீர்வு காணப்படும் - ஸ்ரீ அரவிந்தர்

Post by Admin on Sat Oct 24, 2009 4:57 pm

நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல - எல்லா மனிதரும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால் தெய்வ சக்தியும் உள்ளது. நீ அதில் நம்பிக்கைவைத்தால் திறமையின்மை திறமையாக மாற்றப்பட்டுவிடும், கஷ்டமும் போராட்டமுமே வெற்றியடைவதற்கான சாதனமாகிவிடும்.
மனச்சோர்வு தவறான சக்திகளின் தாக்குதல்களுக்கு கதவு திறக்கும். இதுவே நீ எடுக்க வேண்டிய நிலை : "என்னால் முடிந்ததை நான் செய்வேன், உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்படி பார்த்துக்கொள்ள அன்னையின் சக்தி உள்ளது, இறைவன் உள்ளான்."

கலங்காமல், அமைதியுடனும், நம்பிக்கையுடனும் இருப்பதே சரியான மனப்பான்மை.

தோல்விகளும் தடுமாற்றங்களும் இருந்தால் அவற்றை அமைதியுடன் நோக்கி, அமைதியோடு விடாப்பிடியாக அவற்றை நீக்குமாறு இறைவனது உதவியை நாடவேண்டும், மனங்கலங்கவோ, வேதனைப்படவோ அதைரியப்படவோ கூடாது.

நீயாகவே செய்ய முடியாததை அன்னையின் சக்தியை உதவிக்கு அழைப்பதன் மூலம் செய்து முடிக்கலாம். அந்த உதவியைப் பெற்று அதை உன்னுள் வேலை செய்ய விடுவதே சாதனையில் வெற்றி பெறுவதற்கு உண்மையான வழிமுறையாகும்.

இன்னும் மிகுதியாக இருக்கக்கூடிய கஷ்டங்களும் வெல்லப்படும் என்று உறுதியாக நம்பு. புறஜீவன் அஞ்சி நடுங்கத் தேவையில்லை - அன்னையின் சக்தியும் உன்னுள் உள்ள பக்தியும் வழியில் குறுக்கிடும் தடைகளையெல்லாம் வெல்லப் போதுமானவை ஆகும்.

நீ துக்கத்திற்கோ, மனமுடைந்து போவதற்கோ இடங்கொடுக்கக்கூடாது - அதற்கு நியாயமே இல்லை. அன்னையின் அருள் ஒரு கணங்கூட உன்னிடமிருந்து நீக்கப்படவில்லை.

(எங்கள்) பாதுகாப்பு உணக்கு உண்டு, இனி நீ அஞ்சவோ துக்கப்படவோ தேவையில்லை, இறைவன் மீது நம்பிக்கை வை, இவற்றையெல்லாம் கடந்துபோன ஒரு தீக்கனவைப்போல் உதறிவிடு. எங்களுடைய அன்பும் அருளும் உனக்கு உண்டு என்பதை நம்பு.

உன்னுடைய சொந்த மனத்தின், இச்சா சக்தியின் செயலிலேயே நீ எப்பொழுதும் அதிக நம்பிக்கை வைத்து வந்திருக்கிறாய், அதனால்தான் உன்னால் முன்னேற முடியவில்லை. அமைதியாக அன்னையின் ஆற்றலில் நம்பிக்கை வைக்கும் பழக்கத்தை நீ பெற்றுவிடு. [list=1][*]
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 33

http://inthu.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum