இந்துசமயம்

தமிழ் ஆகம இயல்

Go down

தமிழ் ஆகம இயல் Empty தமிழ் ஆகம இயல்

Post by Admin on Sat Oct 24, 2009 5:03 pm

தமிழ் ஆகம இயல்

ஞானகாண்டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்கும் தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் எவை?

திருவுந்தியார்,
திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது,
உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப்
ப•றொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப
நிராகரணம் என்னும் பதினான்குமாம்.

திருவுந்தியார் அருளிச் செய்தவர் யார்?

உய்யவந்த தேவ நாயனார்.

திருக்களிற்றுப்படியார் அருளிச் செய்தவர் யாவர்?

திருக்கடவூர்
உய்யவந்த தேவ நாயனார். இவர் திருவுந்தியார் அருளிச் செய்த உய்யவந்த தேவ
நாயனாருடைய சீடராகிய திருவியலூர் ஆளுடைய தேவ நாயனாருடைய சீடர்.

சிவஞான போதம் அருளிச் செய்தவர் யாவர்?

திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர். இவருக்குச் சுவேதவனப் பெருமாள் என்பது பிள்ளைத் திருநாமம்.

சிவஞான சித்தியார், இருபா இருபது என்னும் இரண்டும் அருளிச் செய்தவர் யாவர்?

சகலாகம
பண்டிதர் என்னும் காரணப்பெயர் பெற்ற திருத்துறையூர் அருணந்தி
சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட தேவருடைய சீடர் நாற்பத்தொன்பதின்மருள்ளே
தலைவர்.

உண்மை விளக்கம் அருளிச் செய்தவர் யாவர்?

திருவதிகை மனவாசகங் கடந்தார். இவர் மெய்கண்ட தேவருடைய சீடர்களுள் ஒருவர்.

எஞ்சி நின்ற சிவப்பிரகாசம் முதலிய எட்டும் அருளிச் செய்தவர் யாவர்?

கொற்றவன்குடி
உமாபதி சிவாச்சாரியார். இவர் தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவர். இவர்
அருணந்தி சிவாச்சாரியாருடைய சீடராகிய திருப்பெண்ணாகட மறைஞானசம்பந்தரின்
சீடர்.

மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த
சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் என்னும் நால்வரும் எவ்வாறு பெயர்
ªறுவர்?

திருக்கயிலாய பரம்பரைச் சந்தான குரவர் எனப் பெயர் பெறுவர்.

மெய்கண்ட தேவருக்கு ஆசாரியார்கள் யாவர்?

திருக்கயிலாய மலையினின்றும் தேவ விமானத்தின் மேற்கொண்டு எழுந்தருளி வந்த பரஞ்சோதி மாமுனிவர்.

பரஞ்சோதி மாமுனிவருக்கு ஆசாரியார் யாவர்?

சத்தியஞான தரிசனிகள்.

சத்தியஞான தரிசனிகளுக்கு ஆசாரியார் யாவர்?

சனற்குமார மாமுனிவர்.

சனற்குமார மாமுனிவருக்கு ஆசாரியார் யாவர்?

திருநந்தி தேவர்.

திருநந்தி தேவருக்கு ஆசாரியர் யாவர்?

திருநீலகண்ட பரமசிவன்.

--
திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகுஸ்ரீபாலீஸ்வரன்திருக்கோயில்

S.சங்கர் குருக்கள்
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 33

http://inthu.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum