இந்துசமயம்

சைவத் திருமுறைகள்

Go down

சைவத் திருமுறைகள் Empty சைவத் திருமுறைகள்

Post by Admin on Sun Oct 25, 2009 5:56 am

சைவத் திருமுறைகள்


சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

திருமுறைத் தொகுப்பு

10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.

சைவத்திருமுறைகளின் பட்டியல்

* முதலாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)

* இரண்டாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)

* மூன்றாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)

* நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)

* ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)

* ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)

* ஏழாம் திருமுறை - சுந்தரர் (தேவாரம்)

* எட்டாம் திருமுறை - மாணிக்கவாசகர்
o திருவாசகம்
o திருக்கோவையார்

* ஒன்பதாம் திருமுறை:
o திருவிசைப்பா:
+ திருமாளிகைத் தேவர்
+ சேந்தனார்
+ கருவூர்த்தேவர்
+ பூந்துருத்திநம்பி காடநம்பி
+ கண்டராதித்தர்
+ வேணாட்டடிகள்
+ திருவாலியமுதனார்
+ புருடோத்தமநம்பி
+ சேதிராசர்
o திருப்பல்லாண்டு
+ சேதிராசர்

* பத்தாம் திருமுறை:
o திருமந்திரம் - திருமூலர்

* பதினோராம் திருமுறை (பதினோராம் திருமுறையில் உள்ள மொத்த நூல்கள் 40 ஆகும்).
o திரு ஆலவாய் உடையார் இயற்றியவை:
+ திருமுகப் பாசுரம்
o காரைக்கால் அம்மையார் இயற்றியவை:
+ திருலாலங்காட்டுத் திருப்பதிகம்
+ திரு இரட்டை மணிமாலை
+ அற்புதத்திருவந்தாதி
o ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை:
+ சேத்திர வெண்பா
o சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை:
+ பொன்வண்ணத்தந்தாதி
+ திருவாரூர் மும்மணிக்கோவை
+ திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா
o நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:
+ கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
+ திருஈங்கோய்மலை எழுபது
+ திருவலஞ் சுழி மும்மணிக்கோவை
+ பெருந்தேவபாணி
+ கோபப் பிரசாதம்
+ கார் எட்டு
+ போற்றித் திருக்கலிவெண்பா
+ திருமுருகாற்றுப்படை
+ திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
o கல்லாட தேவ நாயனார் இயற்றியவை:
+ திருக்கண்ணப்பதேவர் திருமறம்
o கபிலதேவ நாயனார் இயற்றியவை:
+ மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
+ சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
+ சிவபெருமான் திருஅந்தாதி
o பரணதேவ நாயனார் இயற்றியவை:
+ சிவபெருமான் திருவந்தாதி
o இளம் பெருமான் அடிகள் இயற்றியவை:
+ சிவபெருமான் மும்மணிக்கோவை
o அதிரா அடிகள் இயற்றியவை:
+ மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
o பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:
+ கோயில் நான்மணிமாலை
+ திருக்கழுமல மும்மணிக்கோவை
+ திருவிடை மருதூர் மும்மணிக்கோவை
+ திருவேகம்பமுடையார் திருவந்தாதி
+ திருவொற்றியூர் ஒருபா ஒருபது
o நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:
+ திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
+ கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
+ திருத் தொண்டர் திருவந்தாதி
+ ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
+ ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
+ ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
+ ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
+ ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
+ ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
+ திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை

* பன்னிரண்டாம் திருமுறை
o பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

திருமுறை பாடிய சான்றோர்கள்
வரிசை திருமுறையாசிரியர் திருமுறை பாடல்கள்
1. திருஞான சம்பந்தர் 1,2,3 4147
2. திருநாவுக்கரசர் 4,5,6 4066
3. சுந்தரர் 7 1026
4. மாணிக்கவாசகர் 8 1058
5. திருமாளிகை தேவர் 9 44
6. கண்டராதித்தர் 9 10
7. வேணாட்டடிகள் 9 10
8. சேதிராசர் 9 10
9. பூந்துருத்திநம்பி காடநம்பி 9 12
10. புருடோத்தமநம்பி 9 22
11. திருவாலியமுதனார் 9 42
12. சேந்தனார் 9 47
13. கருவூர்த்தேவர் 9 105
14. திருமூலர் 10 3000
15. திருவாலவாயுடையார் 11 1
16. கல்லாட தேவ நாயனார் 11 1
17. அதிரா அடிகள் 11 23
18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 11 24
19. இளம் பெருமான் அடிகள் 11 30
20. பரணதேவ நாயனார் 11 101
21. சேரமான் பெருமான் நாயனார் 11 11
22. கபிலதேவ நாயனார் 11 157
23. காரைக்கால் அம்மையார் 11 143
24. பட்டினத்துப் பிள்ளையார் 11 192
25. நக்கீர தேவ நாயனார் 11 199
26. நம்பியாண்டார் நம்பி 11 382
27. சேக்கிழார் 12 4286


சைவத் திருமுறைகள்

1, 2, 3. தேவாரம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
4, 5, 6. தேவாரம் திருநாவுக்கரசு நாயனார்
7. தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனார்
8. திருவாசகம்,திருக்கோவையார் மாணிக்க வாசகர்
9. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருமாளிகை தேவர் உட்பட 9பேர்
10. திருமந்திரம் திருமூலர்
11.பிரபந்த மாலை (நூல்கள் 40) காரைக்கால் அம்மையார் உட்பட 12வர்
12. பெரிய புராணம் சேக்கிழார்
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 33

http://inthu.forumta.net

Back to top Go down

சைவத் திருமுறைகள் Empty Re: சைவத் திருமுறைகள்

Post by dharshi on Mon Mar 01, 2010 5:52 pm

நல்ல தகவல் cheers
dharshi
dharshi

Posts : 13
Join date : 2010-03-01

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum