இந்துசமயம்

கலியுக நாச்சியாரம்மன்

Go down

கலியுக நாச்சியாரம்மன் Empty கலியுக நாச்சியாரம்மன்

Post by சிவா on Fri Mar 12, 2010 8:48 pm

புதூரிலிலுள்ள குளக்கட்டாங் குறிச்சியில் கலியுக நாச்சியாரம்மனுக்குக் கோயில் இருக்கிறது. இந்த ஊரில் கம்மவார் நாயுடுகள் மிகுதியாக இருந்தாலும் தேவர் இனத்தவரே கோயிலுக்குப் பரம்பரை பரம்பரையாகப் பூசாரியாக இருக்கின்றனர். கலியுக நாச்சியாரம்மனுக்குக் கற்சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

இவளின் தோற்றம் பற்றி இருவேறு கதைகள் உலவுகின்றன. கடுமையான பஞ்சத்தின் போது இருக்கன்குடியிலிருந்து வந்து கோயில் கொண்ட மாரியம்மாளே இவள் என்று கதைகள் சொல்கிறார்கள். மாரியம்மாளின் மறு அவதாரம் இவள் என்று ஊர் மக்கள் இன்றளவும் நம்பி வருகின்றனர்.

இன்னொரு கதை இவள் கலியுகத்தில் தோன்றி மக்களை நல்வழிப்படுத்துவாள் என்பதாகயிருக்கிறது.

ஒரு முறை குளக்கட்டாங் குறிச்சியில் உள்ள ஆலமரத்தடிக்கு எங்கிருந்தோ ஒரு பைத்தியக்காரன் வந்து சேர்ந்தான். அவன் யாருடனும் பேசவில்லை. மக்களுக்கு அவன் யாரென்றும் தெரியவில்லை. அவனைப் பேச வைக்கப் பலர் முயன்றனர். ஆனால் அத்தனை பேரும் தோற்றுப் போயினர்.

யாராவது சாப்பாடு கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தால், அவர்களைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்து விட்டு, பின்னர் மெதுவாகச் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் ஒரு முறை சாப்பிட்ட பிறகு பின்னர் யார் வந்து எது வைத்தாலும் அதைக் கையாலேயே தொட மாட்டான்.

அவன் ஊமையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். இரவு நேரங்களில் அவன் தனித்து அழுகிறான் என்றும் பார்த்தவர்கள் சொல்லிக் கொண்டனர். ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றிய கதைகள் புதிது புதிதாக முளைக்கத் தொடங்கின.

ஒருநாள் ஊர்க் கூட்டம் போட்டார்கள். அவன்பாட்டுக்கு ஒரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் திருவிழா தொடர்பான பிரச்சனையைப் பற்றி விவாதித்துக் கொண்டார்கள்.

அந்த நேரத்தில் திடீரென விழித்துக் கொண்ட பைத்தியம், 'ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்; ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்' எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

பைத்தியம் உளறுகிறது என்று சொல்லி அவனைச் சத்தம் போட்டு அவனை அப்புறப்படுத்தினர். பலருக்கு அவன் பேசியது ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. திட்டமிட்டபடி, திருவிழா வேலைகள் மும்முரமாக நடந்தன. குறிப்பிட்ட நாளும் வந்தது. திருவிழாவின் கடைசி நாளில் அனைவருக்கு முன்னாலும், திடீரென ஜோதி ஒன்று தோன்றி மறைந்தது. உடனடியாக ஒரு வயதான மூதாட்டியின் உருவமும் வந்து மறைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து மறைந்த இந்த உருவம் அம்மன்தான் என அனைவரும் உறுதிப்படுத்தினர்.

பைத்தியம் சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்து கொண்டவுடன், அனைவரும் அவன் இருந்த இடம் நோக்கி ஓடினார்கள். ஆனால் அவன் அங்கில்லை. அப்புறம் அந்த ஊரில் அவனை யாரும் பார்க்கவில்லை. உடனே அந்தத் தெய்வத்திற்கு கலியுக நாச்சியாரம்மன் எனப் பெயர் சூட்டிக் கோயிலும் கட்டினார்கள்.

இந்தக் கோயிலில் ஆடி மாதம் பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனாருக்கும் கம்மவாருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஊர்த் தெய்வமாகயிருந்த போதும், ஊர் கூடிப் பொங்கல் நடத்துவதில்லை. நாயுடு இனத்தவர்கள் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனார் இனத்தவர்கள் வெள்ளிக் கிழமை பொங்கல் வைக்கிறார்கள்.

இக் கோயிலில் துணைத் தெய்வமாகக் கருப்பசாமி இருக்கிறார். கலியுக நாச்சியாரம்மனுக்குப் பலி கொடுக்கப்ப்டுகிறது.

http://www.eegarai.net/-f8/-t23345.htm
சிவா
சிவா

Posts : 42
Join date : 2010-03-12
Age : 44
Location : மலேசியா

http://www.eegarai.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum