இந்துசமயம்

சங்குகளும் அவற்றின் வகைகளும்.

Go down

சங்குகளும் அவற்றின் வகைகளும். Empty சங்குகளும் அவற்றின் வகைகளும்.

Post by அச்சலா on Wed Sep 11, 2013 12:11 am


பொதுவாக நமது இறை வழிபாட்டிலேயே சங்குக்கு முக்கிய பங்கு உண்டு. தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது. தருமர் வைத்துள்ள சங்கு, ` அனந்த விஜயம் ` என்றும்,அர்ஜூனர் வைத்திருக்கும் சங்கு, ` தேவதத்தம் ` என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ` மகாசங்கம் ` என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, `சுகோஷம் ` என்றும், சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ` மணிபுஷ்பகம் ` என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் ` பாஞ்சஜன்யம் ` என்ற சங்கு,
இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது. சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும்.
திருக்கழுக்குன்றம் குளத்தில் உருவாக்கும் புனித சங்கு :
மார்க்கண்டேயர் அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டு விட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் பூஜை செய்யும்போது தீர்த்தம் எடுப்பதற்கான பாத்திரம் இல்லை. அவர் பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்தார்.
அப்போது சங்கு தீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியது. அச்சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனையடுத்து 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு உருவாகிறது. இதனை புனித சங்காக பூஜையில் வைத்து பூஜித்து வருகிறார்கள்.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில் முதன்மை பெறும். இந்த குளத்தில் குளித்தால் தோல் நோய் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் இந்தியா முழுவதும் இருந்து ஆன்மீக சுற்றுலா வருபவர்கள் இந்த குளத்தில் நீராடி செல்கின்றனர்.
1939-ல் இருந்து இதுவரை 6 சங்குகள் பிறந்துள்ளன. அவை பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு ஆடி பூரம் தினத்தில் சங்கு தீர்த்தக்குளத்தில் புனித சங்கு உருவானது. இதனையடுத்து 12 ஆண்டுக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியான வியாழக்கிழமை சங்கு தீர்த்தக்குளத்தில் புனித சங்கு கரைஒதுங்கியது. இது 7-வது புனித சங்காகும். அடுத்த புனித சங்கு 2023-ம் ஆண்டு பிறக்கும்.
சங்கு தரிசனம் :
சிவன் கோவில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் போல, கார்த்திகை, சோமவார சங்காபிஷேகம் மிகவும் விசேஷமானது. `சித்தாந்த ரத்னாகரம்' என்ற நூலில் சங்காபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. சங்காபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அதை தரிசித்தாலே அபிஷேகம் செய்த பலனை அடைவர் என்பது நம்பிக்கை
சங்காபிஷேக தலங்கள் :
மதுரை, திருக்கடையூர், திருவாதவூர், திருவாடானை, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருச்சி, மயிலாடுதுறை, திருக்கழுக்குன்றம் ஆகிய தலங்களில் கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் 1008 சங்குகள் வைத்து பூஜித்து சிறப்பாக அபிஷேகம் நடத்தப்படுகிறது.
அச்சலா
அச்சலா

Posts : 26
Join date : 2013-09-10
Age : 48
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum