இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எந்தப் பாதையில் சென்றாலும் இங்கேதான் வருகிறீர்கள் - நித்யானந்தர்

Go down

எந்தப் பாதையில் சென்றாலும் இங்கேதான் வருகிறீர்கள் - நித்யானந்தர் Empty எந்தப் பாதையில் சென்றாலும் இங்கேதான் வருகிறீர்கள் - நித்யானந்தர்

Post by Admin Sun Feb 07, 2010 2:32 pm

என்ன செய்தாலும் எல்லையில்லா நிலையான ஞானமடைதல் என்ற ஆனந்த உணர்வை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். வேறு தனியான ஒரு லட்சியம் என்ற ஒன்று பூமியில் இல்லை.

FILE
ஞானமடைதல் என்ற லட்சியத்தில்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். சில நேரங்களில் ஞானமடைதல் என்ற வார்த்தையைத் தெரிந்து கொண்டு வாழ்பவர்கள் ஒரு குழுவாகவும், பல நேரங்களில் அந்த வார்த்தையைத் தெரிந்து கொள்ளாமல், பாதையைத் தெரிந்து கொள்ளாமல் சுற்றிச் சுற்றி அதை அடையும் முயற்சி தோல்வியை சாதனை என்று சொல்லி வாழ்ந்து கொணடிருப்பவர்கள் ஒரு குழுவாகவும் இருக்கிறீர்கள்.

மைசூர் ரோட்டில் நின்று கொண்டு 'பெங்களூரு எவ்வளவு தூரம்?' என்று கேட்டால், "இடதுபக்கம் போனால், 30 கிலோ மீட்டர், வலது பக்கமாகப் போனால் 30,000 கிலோ மீட்டர்" என்று சொல்வார்கள்.

அந்த இரண்டு வழியுமே பெங்களூரு நோக்கித்தான் போகும்.

சில பேர் சரியான பாதையைத் தெரிந்துகொண்டு சுருக்கமான பாதையில் நேராகச் செல்கிறார்கள். சில பேர் தெரியாமல் ஏதோவொரு நீண்ட பாதையில் சென்று கொண்டே இருப்பார்கள்.

எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் கடைசியில் வாழ்க்கையின் லட்சியமான ஞானமடைதலை நோக்கித்தான், ஜீவன் முக்தியை நோக்கித்தான் அவை இயங்குகின்றன. எந்தப் பாதையில் சென்றாலும், ஜீவன் முக்தியை நோக்கித்தான் வந்து கொண்டே இருக்கிறீர்கள்.

வேறு எந்த லட்சியமாக இருந்தாலும் அது உபயோகமில்லாததுதான்.

அது நிச்சயம் என்றாவது ஒரு நாள் கழன்று கொள்ளக் கூடிய லட்சியமாகும். உங்களை விட்டு விலகிவிடக் கூடிய முழுமையடையாத லட்சியமாகும்.

இந்த ஞானமடைதல் மட்டும்தான் உங்களை முழுமையாக்கும் வரை உங்களுடனேயே இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த லட்சியமாகும்.

அதுதான் உங்களுடனேயே இருக்கக்கூடிய குறிக்கோள்.

வேறு எந்த லட்சியத்தை முன்னிட்டு வாழ்ந்தீர்களானாலும் அது துக்கத்திற்கான ஆணிவேராகத்தான் முடியும்.

ஒன்றுமில்லை. மொத்தமாக எழுபது, எண்பது வருடம் மட்டுமே இந்த உடம்பிற்குள் நீங்கள் விளையாடப் போகிறீர்கள். அவ்வளவுதான். Consciousness என்பது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற உணர்வு. நான் இருக்கிறேன் என்று நீங்கள் உணர்கின்றீர்கள் இல்லையா? அதுவே மிகப்பெரிய பரிசு. அதை வீணடித்துக் கொண்டேயிருக்கக் கூடாது. சரியாய் பயன்படுத்த வேண்டும்
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 38

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum