இந்துசமயம்

படிப்பவனை கெடுக்காதே...!

Go down

படிப்பவனை கெடுக்காதே...!

Post by sriramanandaguruji on Tue Jan 04, 2011 4:53 amபுண்ணியம்
இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத்
கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம்
என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய
செயல்களை மட்டுமே! கடவுளே எதிர்நோக்கக் கூடிய புண்ணியங்கள் என்னென்ன
வென்று சிலர் கேட்கலாம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட அவைகளை கிழே காணலாம்


 • உண்மையான பக்தியோடு துளசி வளர்த்தால் எண்ணத்தாலும், செயலாலும் உருவான பாவங்கள் விலக


 • நல்ல மரங்கள் வளர்த்தால் இகத்திலும், பரத்திலும் சுகமுடன் வாழலாம்


 • சுமங்கலிகளை அன்னை பராசக்தியாக நினைத்து பாத பூஜை செய்தால் சௌபாக்கியம் ஏற்படும்.


 • ஏரி, குளம், கிணறு இவைகளை வெட்டுவித்தால் அல்லது வெட்டுவதற்கு
  உதவி செய்தால் அல்லது வெட்டியவற்றை பாதுகாத்தால் முன்னோர் சாபம் விலகும்.


 • இறைவன் வாழும் ஆலயத்தை பெருக்கி, மெழுகி கோலமிட்டால் அவன்
  திருவீதி உலாவரும் பகுதிகளை சுத்தம் செய்தால் சொர்க்கத்தில் அடையும்
  சந்தோஷத்தை பூமியிலேயே பெறலாம்.


 • வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், ஆதரவில்லாதவர்கள், இயலாதவர் ஆகியோர்களுக்கு முடிந்த உதவியை செய்தால் மரணபயம் விலகும்.


 • படிப்பவனை கெடுக்காதிருத்தல், படிக்க முடியாதவனை படிக்க
  வைத்தல், படிக்க உதவுபவனுக்கு ஒத்தாசை செய்தல் போன்றவை வருங்கால
  தலைமுறையினரை வாழ வைக்கும்.புண்ணியங்களாகும்

இத்தகைய புண்ணிய வரிசையில் எனது சொந்த அபிப்பிராயமாக ஒன்றை சொல்ல
விரும்புகிறேன் அதாவது பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தொண்டு செய்யவில்லை
என்றாலும் தொந்தரவு செய்யாதிருத்தல்
<li style="text-align: left;">ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும் </li>
soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_8008.html


sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 40
Join date : 2010-12-19

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum