இந்துசமயம்

நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்

Go down

நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்

Post by sriramanandaguruji on Sat Jan 15, 2011 5:05 am


னுர்
ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரியன் பிரவேசிக்கும் மங்களகரமான இந்த
புனித அறுவடைத் திருநாளில் வாசகர் அனைவருக்கும் மனம் நிறைந்த
நல்வாழ்த்துக்கள்!தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது மூதாதையர்களின் நம்பிக்கை மட்டுமல்ல நம் நம்பிக்கையும் அதுதான்நம் ஒவ்வொறுவர் வாழ்விலும் எத்தனை எத்தனையோ விதவிதமான சிக்கல்கள்
பிரச்சனைகள் அத்தனைக்கும் விடிவுகாலம் வராதா முடிவு தெரியாதா என
ஏக்கத்துடனே ஒவ்வொறு வினாடியையும் கடத்துகின்றோம்
நிச்சயம் ஒருநாள் வெற்றிப்
பெறுவோம் இன்பத்தை அடைவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கைச் சக்கரம்
சுழலுகிறது அந்த நம்பிக்கை இல்லா விட்டால் எல்லாமே இருள்மயமாகி விடும்தன்னை நம்பாமல் நாளும் கிழமையையும் நம்புவது மூடத்தனம் என்று பகுத்தறிவு
வாதம் பேசுபவர் கூட துன்பச்சுமை அழுத்தும் போது கண்ணுக்கே தெரியாத நல்ல
பொழுது தனக்கு எப்படியும் வந்துவிடுமென நம்பித்தான் வாழ்கின்றனர்இதை அவர்கள் வாய் மறுக்கலாம் என்றாலும் நெஞ்சம் நிச்சயம் ரகசியமாக ஒத்துக் கொள்ளும்நல்லகாலம் கெட்டக்காலம் என்பதை ஏற்றுக் கொள்ளுவதும் கொள்ளாததும் அவரவர்
விருப்பம் நாம் அதை விட்டு விட்டு நம்முன்னே நல்ல படியாக நடக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்புக் உள்ளாகிக் கிடக்கும் விஷயங்களை கொஞ்சம் நினைவில்
புறட்டிப் பார்ப்போம்

உலகம் முழுவதையும் மதப்பயங்கர
வாதம் பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது இப்போதே வெடிக்குமா இன்னும்
சற்று நேரங்கழித்து வெடிக்குமா என்ற நெஞ்சப் படப்படப்போடு எல்லாத்தரப்பு
மக்களும் தீவிரவாதத்தால் மிரண்டு போய் கிடக்கிறார்கள்முதலில் இந்த நிலை மாறவேண்டும் துப்பாக்கி பிடித்திருக்கும் கைகளில்
குழந்தைகளுக்கு புகட்டும் பால் புட்டி வரவேண்டும் அப்படி வந்தால்தான்
நடுங்கிக் கொண்டிருக்கும் இதயங்கள் நல்லமைதி கொள்ளும்அடுத்ததாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பெருவாரியான மனிதர்களை பீடித்திருக்கும் பசிப்பிணி நீங்க வேண்டும்படிக்க ஆசை இருந்தும் கையில் காசில்லாமல் பட்டாசு தொழிற்சாலையில்
கந்தகத்தோடும் தெருவோற டீக்கடையில் எச்சில் டம்ளரோடும் போராடி வாழ்கையை
தொலைத்துக் கொண்டிருக்கும் லச்சகக்கணக்கான சின்னஞ்சிறு அறும்புகளின்
கனவுகள் மெர்ப்பட வேண்டும்

சினிமாக்காரனுக்கு அபிஷேகம்
செய்தும் அரசியல்வாதிகளுக்கு கொடிபிடித்தும் குருடர்களாக கிடக்கும் எங்கள்
இளைஞர்கள் சற்றேனும் சுயநினைவு பெற்று நாட்டைப் பற்றியும் வீட்டைப்
பற்றியும் சிந்திக்க வேண்டும்எங்கள் மங்கையர் திலகங்களை போதையில் மிதக்கவைக்கும் சின்னத்திரையின் ஒப்பாரி தொடர்கள் முடிவுக்கு வரவேண்டும்எங்களை ஆளுகின்ற சுயநல கூட்டத்தாரும் ஆளப்போகின்ற ஆதிக்க கும்பலும்
எங்கள் இன்னல்களைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்தித்து இறக்கம் காட்டி
அடிக்கின்ற கொள்ளையின் அளவை குறைக்க வேண்டும்காசு வாங்கி ஓட்டுப் போடும் ஈன புத்தி எங்களிடமிருந்து விலக வேண்டும்


சொந்த நாட்டில் வாழ முடியாமல் உலகம் முழுவதும் அனாதைகளாய் அகதிகளாய்
கையேந்தி நிற்கும் எங்கள் ஈழ சொந்தங்களின் துயரம் இந்தத் தையிலாவது
நீங்கும் வழி தெரிய வேண்டும்மிக முக்கியமாக விவசாயிகளின் தற்கொலை இனி நடக்கவே கூடாதுஊருக்கெல்லாம் சோறு போடும் உழவன் வயிற்றுக்கு உணவின்றி வரப்பு
பொந்துக்குள் வாழும் எலிகளை பிடித்து தின்னும் நிலைக்கு வந்து விடவே கூடாதுஇந்த நம்பிக்கை எல்லாம் நிறைவேற பொங்கட்டும் பொங்கல்கனவுகள் நினைவாக உதிக்கட்டும் ஆதித்தன்இன்பம் மட்டுமே இனி கரும்பாக இனிக்கட்டும்!துயரங்கள் மறைந்து இன்பங்கள் பொங்கலோ பொங்கல்!
soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_2393.html

sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 40
Join date : 2010-12-19

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum