இந்துசமயம்

யார் நல்ல குரு...?

Go down

யார் நல்ல குரு...?

Post by sriramanandaguruji on Fri Jan 21, 2011 4:40 am

இன்றைக்கு மக்களிடம் இருக்கும் தலையாய பிரச்சனையே யார் நல்ல குரு என்பது தான்.


சில குருமார்களின் செயல்பாடுகளை பார்த்தால் ஜனங்களுக்கு மிகவும்
அச்சமாகயிருக்கிறது. அரசியல்வாதிகளும், கொலைகாரர்களும் செய்ய கூடிய பஞ்சமா
பாதகங்களை குருமார்கள் என சொல்லப்படுவர்கள் மிக சாதரணமாக செய்து
விடுகிறார்கள்.இதற்கு காரணம் என்ன?


மக்களின் கண் மூடித்தனமான மூட பக்தியே ஆகும். எல்லா மனிதனுக்கும்
பிரச்சனையிருக்கிறது. தோட்டியிலிருந்து தொண்டைமான் வரைக்கும்
கவலையிருக்கிறது.


அனைவரும் தனது கவலைக்கு யாராவது மருந்து தரமாட்டார்களா? என ஏங்குகிறார்கள்.
இந்த ஏக்கம் மக்களின் அறிவு கண்னை மறைக்கிறது. இதனால் புற்றியாசல் போல போலி குருமார்கள் புறப்பட்டு விடுகிறார்கள்.


புரோகிதன் தட்சனை கேட்கலாம். ஜோதிடன் காணிக்கை கேட்கலாம். பரிகாரம்
செய்பவன் கூட பணம் கேட்கலாம். ஆனால் குரு பணத்தை எதிர்பார்க்க கூடாது.


அப்படி எதிர்பார்த்தால் அவன் குருவே அல்ல.


எவனிடம் சுத்தமான வாக்கும், தெளிவான
ஞானமும், பரிபூரனமான பக்தியும், உறுதியான வைராக்கியமும், எளிமையான
வாழ்க்கையும் இருக்கிறதோ அவனே சிறந்த குரு.


ஆடம்பர மாளிகையில் குருவை தேடுபவன் நல்ல குருவை எப்போதும் பெறமாட்டான்.
மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


<li style="text-align: right;">ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும </li>
இந்து மத வரலாறு படிக்க இங்கு செல்லவும்


soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_21.html

sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 40
Join date : 2010-12-19

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum