இந்துசமயம்

இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி

Go down

இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி Empty இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி

Post by Admin on Sat Oct 24, 2009 4:56 pm

கேள்வி : அம்மா, மனிதனுக்கும், இறக்கைக்குமுள்ள உறவு என்ன?FILE

அ‌ம்மா : மகனே, மனிதன் இயற்கையிலிருந்து வேறுபட்டவனல்ல. அவன் இயற்கையின் அங்கமாவான். உண்மையில் இயற்கையை நாம் பாதுகாக்கவில்லை; இயற்கைதான் நம்மைப் பாதுகாக்கிறது. பூமியில் இயற்கையைச் சார்ந்தே மனிதன் உயிர் வாழ்கிறான். காற்றைத் தூய்மைப்படுத்துதல் நடக்கவேண்டுமெனில் மரம், செடி, கொடிகள் தேவை. சுற்றுப்புறம் தூய்மையை இழக்கும்போது நம்முடைய ஆரோக்கியம் கெடுகிறது; பலவித நோய்களுக்கு அடிமையாகிறோம். இயற்கையில் ஏற்படும் எந்த மாற்றமும் மனிதனைப் பாதிக்கிறது. அதுபோலவே, மனிதனின் செயல்களும், சிந்தனை அலைகளும் இயற்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இயற்கையின் சமநிலை தறவினால் மனித வாழ்வின் சமநிலை தவறும். அதேபோல், மனிதனின் சமநிலை தவறும்போது இயற்கையின் சமநிலையும் தவறும்.

கேள்வி : மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலுள்ள உறவு உருக்குலையக் காரணம் என்ன?

அம்மா : மனிதனின் களங்கமற்ற தன்மையே அவனை இயற்கையுடன் பிணைக்கும் சங்கிலியாகும். வானவில்லைக் காணும்போது, கடல் அலைகளைக் காணும்போதும் சிறு குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சி நமக்கு ஏற்படுவதுண்டா? சுயநலம் அதிகரிக்கும்போதும், குருட்டுப்புத்தி வளரும்போதும் நமது களங்கமற்ற தன்மை அழிகிறது. அப்போது மனிதன் இயற்கையை விட்டு விலகுகிறான். இயற்கையைச் சுரண்ட ஆரம்பிக்கிறான். இயற்கைக்குக் கலக்கம் உண்டாக்குவதன் மூலம் தனது அழிவிற்குத் தானே காரணமாகிறான் என்பதை அவன் அறிவதில்லை.

மனிதனுடைய குழந்தைப் பருவத்தின் கள்ளங்கபடமற்ற தன்மையை என்றென்றும் நிலைநிறுத்த உதவுவது இறை நம்பிக்கையாகும். இறைபுத்தியும், நம்பிக்கையுமுள்ள ஒருவன் இயற்கையின் ஒவ்வொரு பொருளிலும், பறவை, மிருகங்களிலும் தனது இஷ்ட தெய்வத்தையே தரிசிக்கிறான். இயற்கையுடன் அவன் இணங்கிவாழ வல்லவனாக இது வழிசெய்கிறது. உண்மையான இறை நம்பிக்கையுள்ள ஒருவரிடமிருந்து சர்வ சராசரங்களை நோக்கிப் பெருகிவரும் அன்பானது, இயற்கையின் உள்ளத்தைக் குளிர்விக்கிறது. அதுதான் உண்மையான இயற்கைப் பாதுகாப்பாகும். இன்று மனிதன் தனது சுயநலத்தால் இயற்கையைத் தன்னிலிருந்து வேறுபட்டதாகக் காண்கிறான்.

இரண்டு கைகளும் என்னுடையவையே என்ற உணர்வு இருப்பதால்தான் இடதுகையில் காயம்பட்டால் வலது கை ஆறுதலளிக்க முன்வருகிறது. தனது கையிடம் காட்டுவது போல், மற்றொரு மனிதரின் கையில் காயம்பட்டால் நாம் அன்பு காட்டுவதில்லை. அது என் கையல்ல என்ற எண்ணமே இதற்குக் காரணமாகும். இன்று இயற்கையைத் தனது சுயநலத்தை நிறைவேற்றும் கருவியாகவே மனிதன் காண்கிறான். அறிவியல் வளர்வதற்கேற்ப, விஷயங்களை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள முயல்வதற்கேற்ப மனிதனின் பரந்தமனப்பான்மை அழிந்து வருவதையே நாம் காண்கிறோம்.

பத்து தக்காளி கிடைக்கும் செடியிலிருந்து நூறு தக்காளியை விளைவிக்க அவன் படித்தான். அதன் பருமனை இருமடங்காக்கவும் அவனுக்கு முடிந்தது. விளைச்சல் அதிகரித்தபோது ஏழ்மை குறைந்தது என்பது சரிதான். ஆனால், ஒரு இடத்தில் பட்டினி மரணம் குறைந்தது எனில், மற்றொருபுறம் புதிய நோய்களால் நூற்றுக்கணக்கில் மனிதர்கள் அணு அணுவாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். புதிய காய்கறிகள் பசியை நீக்கியதோடு கூட, உடலின் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியும் அழி‌த்துவிட்டது.

செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் உணவுடன் செல்வதன் மூலம் ஏற்படும் பின்விளைவைப் பற்றி நாம் சரியாக உணரவில்லை. இந்த ரசாயனப் பொருள்கள் உடலிலுள்ள உயிரணுக்களை அழிக்கின்றன. அவனை நோய்களுக்கு அடிமையாக்குகின்றன. வழக்கத்திற்கு மாறாக விளைச்சலை அதிகரித்ததுடன் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அறிவியல் வளர்ச்சி பெற்றது என்றாலும், அதன் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து செயல்படுவதற்கு, சுயநலத்தால் மனிதன் முன்வர மறுக்கிறான்.

விவசாயத்திற்கு செயற்கை உரங்களை உபயோகிக்கக் காரணம் மனிதனின் சுயநலமே அன்றி, பயிர்கள் மீது அவன் கொண்ட அன்பல்ல. ஒரு பலூனை ஊதுவதற்கு எல்லை உண்டு. அளவுக்கதிகமாக ஊதினால் பலூன் வெடித்துவிடும். அதுபோல் ஒரு விதை அளிக்கும் விளைச்சலுக்கு எல்லை உண்டு. அதைச் சிந்திக்காமல் செயற்கை உரங்களையும், பிறவற்றையும் சேர்த்து விளைச்சலை அதிகரிக்கச் செய்தால் விதையின் சக்தியும், குணமும் குறையும். அதை உண்ணும் மனிதனின் உயிரணுக்களையும் அது மோசமாகப் பாதிக்கும். பழங்காலத்தில், விவசாயத்திற்கு நீரும், இயற்கை உரமும் மட்டும் போதுமானதாக இருந்தது. இன்றோ, மருந்தடிக்க வேண்டும். செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தி போய்விட்டது. அவற்றின் நோய் எதிரப்பு சக்தி அழிக்கப்படுகிறது. அனைத்தையும் மரியாதையுடன் அன்பு செய்யவே மதம் கூறுகிறது. அறிவியல், அனைத்தையும் இருமடங்கு உண்டாக்கக் கண்டுபிடித்தது. ஆனால், அதில் அவ்வளவு குணமில்லை. இட்லியில் ஈஸ்ட் சேர்த்து இருமடங்கு பெரியதாக்கும்போது இட்லியின் குணம் குறையத்தானே செய்யும்?
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 33

http://inthu.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum