இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நாய்களின் எல்லைக் கோடுகள் !

Go down

நாய்களின் எல்லைக் கோடுகள் ! Empty நாய்களின் எல்லைக் கோடுகள் !

Post by Admin Sat Oct 24, 2009 5:00 pm

தன் இனத்தைச் சேர்ந்தவர்களை வெறுப்புடன் பார்க்கும் குணம் நாய்களுக்கும்
மனிதர்களுக்கும் தான் இருக்கின்றன. தெரு நாய்களை நன்கு கவனித்தால் அது
மற்றொரு தெருநாயை அல்லது அடுத்தத் தெரு நாயை தன்னுடைய தெருவிற்குள் நுழைய
அனுமதிக்காது.

பக்தி என்றப் பெயரில் பொது இடங்களில் வழிபாட்டுத்
தளங்கள் இத்தகையது தான். வழிபாட்டுத் தளங்கள் பக்தியை வளர்க்கின்றன. அது
ஒரு நம்பிக்கை என்பதைத் தாண்டி மதவெறியர்களின் எல்லைக் கோடுகள் ஆகிப்
போனதைத் தான் இன்றைய காலத்தில் பார்க்கிறோம். பொது இடங்களில் வழிபாட்டுத்
தளங்கள் இருக்கும் போது பிற மதத்தினர் அந்த வழியாக தங்கள் மத ஊர்வலங்களை
நடத்தும் போது அந்த இடங்கள் கலவர பூமியாகிறது. 100 பேர் வரை காயமடையவும்
சிலரின் இறப்புகளுக்கு காரணமாகவும் எதாவது ஒரு பொது இட வழிப்பாட்டுத்
தளங்கள் ஆண்டு தோறும் ஒரு கெட்ட நிகழ்வுகளை ஏற்படுத்துவிடுகிறது.
குறிப்பாக விநாயகர் ஊர்வலங்களில் இதை பார்க்கலாம்.

பொது இடங்களின்
வழிபாட்டுத் தளங்களின் விழாக்களின் போது பல்வேறு தரப்பினர் தொல்லைக்கு
ஆளாகின்றனர். குறிப்பாக ஒலி அளவு மிகுந்த ஒலிப் பெருக்கிகளை வைப்பதால்
அங்கு படிக்கும் மாணவர்கள் முதல் பிறந்த குழந்தைகளின் தூக்கம் கெடுகிறது.
அதிகாலை வழிபாடு/தொழுகை என்ற பெயரில் ஓலமிடும் ஒலிப்பெருக்கிகள் பலரின்
தூக்கத்தைக் கெடுக்கிறது. இன்றைக்கு பலரும் இரவு வேலை பார்த்துவிட்டு
அதிகாலைத் திரும்புவர்களாகவும், விடியற்காலை தூங்கச் செல்பவர்களாகவும் கூட
இருக்கிறார்கள். அவர்களின் தூக்கத்தை இத்தகைய வழிபாடுகள் கெடுக்கிறது
என்பது உண்மை. மேலும் மதவழி வழிபாட்டு நம்பிக்கையை அந்தந்த மதத்தினர்
மட்டுமே சகித்துக் கொள்வர் என்பது கண்கூடு.

புதிதாக சாலை
விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளும் ஒப்புதல் அளித்தாலும் கடைசியில் ஒரு
முட்டுக்கட்டையாகவே பொது இடத்தில் அமைந்த வழிபாட்டுத் தளங்கள்
அமைந்துவிடுகின்றன. அதை அகற்றி திட்டம் நிறைவேறுவதற்குள் பல்வேறு
எதிர்புகளையும் நீதிமன்றங்களின் தடை ஆணையையும் சந்திக்க நேரிட்டு மக்கள்
நலத் திட்டச் செயல்பாடுகளின் காலம் தாழ்கிறது.

வீட்டிற்குள்
வழிபாடுகளை யாரும் தடை செய்யப் போவதில்லை. ஏற்கனவே இருக்கும்
லட்சக்கணக்கான வழிபாடுத்தளங்களில் 50 விழுக்காடு வரை பராமரிப்பு இன்றிக்
கிடக்கிறது, புதிதாகக் கட்டுவதற்கான தேவை என்றால் புதியதொரு குடி
இருப்புப் பகுதி ஏற்பட்டு அது வழிபாடுத்தளங்களுக்கு தொலைவில்
அமைந்திருந்தால் தான் அங்கு தேவைப்படும். மற்றபடி ஏற்கனவே அமைந்த குடி
இருப்புப் பகுதிகளில் புதிய வழிபாட்டுத் தளங்களை அதுவும்
பலமதத்தினருக்கும் பொதுவான ஒரு இடத்தில் அமைப்பதால் சமூக அமைதி கெடுகிறது
என்பதுடன் மேற்கண்ட பல தொல்லைகளும் ஏற்படுகின்றன. இவை முற்றிலும்
தவிர்க்கப் படவேண்டும். பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும்
வழிபாடுத்தளங்களை அகற்ற அந்தந்த மத நலவிரும்பிகள் முன்வருவதே மத
நல்லிணக்கத்திற்கு நல்லது.

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் - என்கிற தீர்ப்பையும் வழிகாட்டுதல்களையும் வரவேற்கிறேன்.

"உள்ளமே
கோவில் ஊனுடம்பே ஆலயம்" - இரண்டையும் நன்கு உணர்ந்து கொண்டால்
புறவழிபாட்டுத் தளங்கள் அதுவும் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும்
வழிபாட்டுத் தளங்கள் தேவைப் படாது.

நாய்களின் எல்லைக் கோடுகள் ! Napuuc10

அப்படியும் பொது வழிபாட்டுத் தளம் வேண்டும் என்போர் பூசலார்
முறையைப் பின்பற்றிக் கட்டலாம், அது அனைத்து மதத்தினரும் அவரவர்
வழிபாட்டுத் தலங்களை விருப்பம் போல் அமைத்துக் கொள்ள ஏற்றதொரு நல்வழிதான்
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 38

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum