இந்துசமயம்

கோவில்கள் பற்றி சில செய்திகள்

Go down

கோவில்கள் பற்றி சில செய்திகள் Empty கோவில்கள் பற்றி சில செய்திகள்

Post by சிவா on Fri Mar 12, 2010 8:52 pm

தோடுடை யசெவி யன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடை யசுட லைப்பொடி பூயென்
னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடை யமல ரான்முயை நாட்பணிந்
தேத்த அருள்செய்த
பீடுடை யபிர மாபுர மேவிய
பெம்மா னிவ னன்றே.
-தேவாரம்.


தமிழர்கள் பெரும்பாலோர் ”குலதெய்வ வழிபாடு” செய்வார்கள். நம் முன்னோர்களை வழிபடுவதே ”குலதெய்வ வழிபாடு”.

பண்டை காலத்தில் கோவில்கள் கீழ்காணும் வகையில் வகைப் படுத்தபட்டுள்ளன.

பெருங்கோயில் - மாடக் கோயில்

குன்றுகள் மேல் கட்டப்பட்டவை பெருங்கோயில்கள்.

கரக்கோயில்

தேரைப் போன்ற அமைப்புள்ளது.

ஞாழற் கோயில்

நறுஞ்சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற்கோயில்.

இளங்கோயில்

பழமையான கோயில்களுக்கு மாறாகக் காலத்தால் பிற்பட்ட கோயில்கள் இளங்கோயில்கள்.

மணிக்கோயில்

மணிபோன்ற விமான அமைப்பைக் கொண்ட கோயில்.

கொகுடிக் கோயில்

முல்லைக் கொடிகள் படந்த சூழ்நிலையில் அமைந்தது.

ஆலக்கோயில்

ஆலமரத்தடியில் எழுந்த கோயில்கள் ஆலக்கோயில்கள்.
சிவா
சிவா

Posts : 42
Join date : 2010-03-12
Age : 44
Location : மலேசியா

http://www.eegarai.net

Back to top Go down

கோவில்கள் பற்றி சில செய்திகள் Empty Re: கோவில்கள் பற்றி சில செய்திகள்

Post by சிவா on Fri Mar 12, 2010 8:53 pm

கோவில்கள் கலையை கீழ்கண்டவாறு பார்க்கலாம்இந்தியக் கட்டிக் கலை (கோவில்)


* நாகரக்கலை
* வேசரக்கலை
* திராவிடர்கலை

தமிழக கோவில்கள் பெரும்பாலும் திராவிடர் கலையை சேர்ந்தவை.

கோவில்களின் கலையை, மன்னர்களின் ஆட்சி முறை அடிப்படையில், பிரெஞ்சு அறிஞர் துப்ராய் கீழ் கண்டவாறு பிரித்துள்ளார்.

பல்லவர்கள் காலம் (கி.பி. 600-850) - குடைவரைகள்.

முதற் சோழர்கள் காலம் (கி.பி. 850-1100) - விமானங்களின் காலம்.

கடைசி சோழர்கள் காலம் (கி.பி. 1100-1350) - அழகிய கோபுரங்களின் காலம்.

விஜயநகர காலம் (கி.பி. 1350-1600) - அழகிய மண்டபங்களின் காலம்.

கி.பி. 1600-க்கு பிறகு - அழகிய பிரகாரங்களின் காலம்.

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள் காலத்தில் தான் தமிழகத்தில் கோயில்கள் கலைக்கு ஓர் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதில் முக்கியமானவர் மகேந்திரவர்மர் (கி.பி. 610-630). இவர்சிம்ம விஷ்ணுவின் மகன் (கி.பி. 575-610). மகேந்திரவர்மா காலத்தில் தான் தமிழகத்தில் பல இடங்களில், பல குடைவரைக் கோயில்கள் தோன்றின.
சிவா
சிவா

Posts : 42
Join date : 2010-03-12
Age : 44
Location : மலேசியா

http://www.eegarai.net

Back to top Go down

கோவில்கள் பற்றி சில செய்திகள் Empty Re: கோவில்கள் பற்றி சில செய்திகள்

Post by சிவா on Fri Mar 12, 2010 8:58 pm

பல்லவர் கால கட்டிடக்கலை


* குடைவரைக் கோயில் (ஒற்றைக் கல் இரதங்கள்)

டி மகேந்திரன் மாமல்லன் பாணி

* கற்றளிகள்

டி இராஜசிம்மன் நந்திவர்மான் பாணி

மகேந்திரவர்மா காலத்து குடைவரைக் கோவில்கள்

1. மண்டகப்பட்டிலுள்ள இலச்சி தாயனக் குடைவரை.
2. பல்லாவரத்திலுள்ள பஞ்ச பாண்டவர் குடைவரை.
3. குரங்கணில் முத்தத்திலுள்ள கல் மண்டபம்.
4. வல்லத்திலுள்ள வசந்தேசுவரர் மண்டபம்.
5. மாமண்டூரிலுள்ள உருத்திர வால்சுவர மண்டபம்.
6. மகேந்திர வாடியிலுள்ள மகேந்திர விஷ்ணு கிரகம்.
7. தளவானூரிலுள்ள சத்துரு மல்லன் மண்டபம்.
8. சீய மங்கலத்திலுள்ள அவனி பாஜன பல்லவேசுவ கிரகம்.
9. திருச்சி மலை கோட்டையிலுள்ள லலிதாங்குரன் மண்டபம்.
10. பஞ்ச பாண்டவர் மண்டபம். இது விளாம்பாக்கத்திலுள்ளது.

இவர் வேளாண்மைக்காக மாமண்டூர் அருகில் சித்ரமேக தாடகம் என்ற குளத்தை வெட்டியுள்ளார்.
சிவா
சிவா

Posts : 42
Join date : 2010-03-12
Age : 44
Location : மலேசியா

http://www.eegarai.net

Back to top Go down

கோவில்கள் பற்றி சில செய்திகள் Empty Re: கோவில்கள் பற்றி சில செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum