Latest topics
» மகா சதாசிவன் படம்by அச்சலா Wed Aug 20, 2014 1:40 pm
» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்
by அச்சலா Mon Aug 18, 2014 4:36 am
» கதிர்காமம்
by அச்சலா Mon Aug 18, 2014 4:34 am
» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்
by அச்சலா Mon Aug 18, 2014 4:23 am
» இராமாயணம் வரலாறு
by அச்சலா Wed Sep 11, 2013 12:24 pm
» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்
by அச்சலா Wed Sep 11, 2013 1:38 am
» சங்குகளும் அவற்றின் வகைகளும்.
by அச்சலா Wed Sep 11, 2013 12:11 am
» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
by அச்சலா Tue Sep 10, 2013 11:34 pm
» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு
by அச்சலா Tue Sep 10, 2013 11:19 pm
இந்து சமயம்
Page 1 of 1
இந்து சமயம்
இந்து சமயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது . பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத கால பண்பாட்டில் தோற்றம் பெற்றது.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.
ஒரு சுருக்கமான மேலோட்டம்
இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. ஆறு வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.
சனாதன தர்மம்
"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்ட construct களைக் கடந்து, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.
யோக தர்மம்
இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வாழ்வின் நான்கு இலக்குகள்
இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயென கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளையும் அறம், வீடு என்ற கரைகளுக்கு இடையில் ஓடும் இன்பம், பொருள் என்ற நதி எனவும் சிலர் நோக்குவர்.

Similar topics
» இந்து சமயம் ( Hinduism )
» சைவ சமயம் (ஆறுமுகநாவலர்)
» இந்து சமயத்தின் வேதங்கள் என்பவை
» இந்து ஆவி சிவனையும் முஸ்லீம் ஆவி அல்லாவையும் தான் பார்க்கிறதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum