இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சைவசமய சாரம்

Go down

சைவசமய சாரம் Empty சைவசமய சாரம்

Post by Admin Thu Oct 29, 2009 5:10 pm

சைவசமய சாரம்

க. கடவுள்

‘அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்க
மனப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
யொன்றனுக் கொன்றுநின் றெழில் பகரி
ணு}ற்றெரு கோடியின் மேற்பட விரிந்தன
வின்னுழை கதிரின் துன்னணுப் புரையச்
சிறிய வரகப் பெரியோன்’

-திருவண்டப்பகுதி.

ஆகாயத்தை இராக்காலத்திலே அண்ணாந்து பார்த்தால் அதிலே எண்ணில்லாத நட்சத்திரங்கள் மின்னி விளங்குவதைக் காணலாம். இந்த நட்சத்திரங்கள் வெகு து}ரத்திலே இருத்தலாற் சிறியவைகளாகத் தோன்றுகின்றன அவைகள் உள்ளபடி மிகப்பெரியவைகளாம். சூரியன் பூமியிலும் பதின்மூன்று மடங்கு பெரியது. எல்லா நட்சத்திரங்களும் சூரியனிலும் பெரியவைகளே. ஆனால், இந்த பூழியையும் சூரியனையும் எண்ணில்லாத நட்சத்திரங்கயையும் மாயையிலிருந்து உண்டாகிய கடவுளுடைய பெருமையை யார்தான் சொல்ல வல்லவர்!

இந்த அளவில்லாத பெருமையை உடைய கடவுள் அன்பையே வடிவமாக உடையவர்.

‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்திலர்
இன்பே சிவமாவதாரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே.’

ஆதலால் அவர் நம்மிடத்திற் கொண்ட அன்பும் அளவில்லாதாயே இருக்கும். பெற்ற தயானவள் குழந்தையிடத்தே எவ்வளவு அன்புடையவளாய் இருக்கிறாள். கடவுளுடைய அன்பு தாயினுடைய அன்பிலும் கோடாநுகோடி மடங்கு அதிகமாய் இருக்குமல்லவா! தாயைக் காணும்போது குழந்தை எவ்வளவு ஆநந்தம் அடைகிறது. ஆதலால், தாயிலும் பார்க்க அதிகமான அன்புடைய கடவைள நினனக்கும் போதும் அவரைக் கோயிலே காணும் போதும், நமது மனம் கரைந்து உருகுதல் வேண்டும்.

‘மெய்தா னரும்பி விதிர்விதிர்த்
துன்விரை யார்கழற்கென்
கைதான் றலைவைத்துக் கண்;ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் றவிர்ந் துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னுங்
கைதா னெகிழ விடேனுடை
யாயென்னைக் கண்டு கொள்ளே.’

தாய் தந்தையர் குழந்தைக்கு வேண்டிய ஊண் உடை முதலியவற்றை, அக்குழந்தை கோளாமலிருக்கவே பொடுத்து விடுகிறார்கள். குழந்தைக்கு வேண்டியவற்றுட் சிலவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள். அவற்றைக் குழந்தை அவர்களுக்குச் சொல்லியபின்பு அவர்கள் கொடுக்கிறார்கள். கடவுள் எல்லாம் அறிபவர். ஆதலால், எமக்கு வேண்டிய யாவற்றையும் அவர் தாமாகவே தருவார் நாம் அவரை ஒன்றுங் கேட்க வேண்டியதில்லை. அவரை வணங்குதலும், துதித்தலும், நினைத்தலும், பூசித்தலுமே நாம் செய்ய வேண்டியவை.

“பால்நினைந் து}ட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவி யேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆநந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
சேல்வமே சிவபெரு மானே
யர்னுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.”

இந்த உடம்பு நம்மோடு எப்போதும் இருப்பதன்று. ஒருநாளைக்கு நாம் இதைவிட்டு விலகவேண்டிவரும். அப்போது நமது தாய் தந்தையரும் சுற்றத்தவரும் நண்பரும் தம்மை விட்டுப் பிரிந்து விடுவார்கள். நமது பொருள் பண்டங்களும் தொடர்பற்றுப்போம். கடவுள் ஒருவரே எக்காலத்திலும் எல்லையில்லாத அன்பைச் சொரிந்து கொண்டு நம்மோடு துணையாய் நிற்கும் மெய்ப்பொருள்.

“ஈன்றாளு மாய் எனக் கெந்தையு
மாயுடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்துகந்
தான்மனத் துள்ளிருக்க
என்றான் இமையவர்க் கன்பன்
திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்னடி யோங்களுக்கே.”

ஆதலால் நம்முடைய மனம் அவரையே நாடுதல் வேண்டும். நாம் நமது சீவனத்துக்கு வேணன்டிய தொழில்களைச் செய்யும்போது நமது மனம் அவற்றிலே செல்லுமாயினும் அதன் நாட்டம் எப்போதும் கடவுளிடத்தே இருத்தல் வேண்டும்.

‘நாடகத்தா லுன்னடியார் போனடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றே
னாடகத்சீர் மணிக்குன்றே யிடையறா வன்புனக்கென்
னு}டகத்தே நின்றுருகத் தந்தருளெம் முடையானே.’

இரவும் பகலும் துதிசெய் திருநாள்
பரவும் பரிசே பரிசாய் அருள்வாய்
கரவண் டெழுசூர் களையக் கதிர்போல்
விரவுஞ் சுடர்வேல் விடுசே வகனே.


உ. ஆன்மாக்கள்

ஆன்மாக்கள் என்றும் உள்ளவை அவற்றின் அறிவை ஆணவம் என்ற ஒரு பொருள் இயல்பாகவே மறைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆணவ மறைப்பை நீக்கி நிறைவான மெய்யறிவெனப்படும் சிவஞானத்தகை; கொடுத்தற்காகவே கடவுள் ஆன்மாக்ளுக்கு உடம்புகளைக் கொடுத்தருளுகிறார். இந்த உடம்புகள் புழு உடம்பு முதல் மனித உடம்பு ஈறாக பலவகைப்படும்.



“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்மாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாப் நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்”

என்று பாடியருளினார் மாணிக்கவாசகர். ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் உடம்பானது அது அப்போது அனுபவிக்கவேண்டிய வினைகளுக்குத் தக்கதாய் இருக்கும் வினைப்பயனை அனுபவித்தால் ஆணவ மறைப்புக் குறையும். ஆதலால், ஒரு ஆன்மா எந்தப் பிறவியை எடுத்தாலும், அந்தப் பிறவியிலே அதனுடைய ஆணவ மறைப்புச் சற்றே குறையும்; மெய்யறிவு சற்றே வளரும்.

ஆகவே, ஆன்மாக்களாகிய எம்முடைய பிரதானமான தொழில் இந்த ஆணவ மறைப்பை நீக்கிச் சிவஞானத்தைப் பெறுதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தலேயாம். சிவஞானத்துக்குக் கடவுளுடைய திருவடிகள் என்றும் பெயர். இதனாலேதான், கடவுளுடைய திருவடிகளை அடைதலே நம் பிறவி எடுப்பதன் பயன் என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்; அத்திருவடிகளைத் தருமாறு கடவுளை வேண்டுகிறார்கள்.

‘ஒருவனே போற்றி ஒப்பிலப்பனே போற்றி வானேர்
குருவனே போற்றி யெங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருகவென் றென்னைநின்பால் வாங்கிடவேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் றனிமை தீப்த்தே’

என்று பாடியருளியதும் மாணிக்கவாசக சுவாமிகளாம். ஊயிர்கள் யாவும் அத்திருவடிகளை அடைவதற்காகவே யாத்திரை செய்கின்றன. கதிர்காமத்துக்கு வழி நடையாய் யாத்திரை செய்பவர்கள் காலையிலும் மலையிலும் இயன்றளவு நடப்பார்கள்: நடுப்பகலிலும் இரவிலும் ஒரு இடத்திலே தங்கியிருந்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓய்வாய் இருப்பார்கள். தங்கியிருக்கும் போதும் சமைக்கும் போதும் அடிக்கடி “கதிர்வேல், கதிர்வேல்” என்று அலறுவார்கள்: அவர்கள் என்ன தொழில் செய்தாலுமு;, அவர்களுடைய மனம் இடையறாது கதிர்காமத்தையனிடத்தே தான் செல்லும். அது போலக் கடவுளுடைய திருவடிகளை அடைவதற்கு யாத்திரை செய்பவர்களாகிய நாம் அந்த யாத்திரையையே முழு நோக்கமாகவும் உண்ணுதலையும் உறங்கு தலையும் அதற்குத் துணையாகவும் கொள்ளுதல் வேண்டும்.

கதிர்காம யாத்திரைகாரர் கூட்டம் கூட்டமாகப் போதல் வழக்கம் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆண்களும், பெண்களும், பெரியாரும், சிறியாரும், கற்றாரும் கல்லாதாரும், செல்வரும் வறியவரும் உளர். ஆயினும் யாவரும் கதிர்காமத்து ஆண்டவனுடைய அடியவர்கள் என்ற கொள்கையை உடையவராய் அன்பும் அருளும் நிறைந்தவராய், ஒருவிதமான வேற்றுமையும் பாராட்டமல், யாத்திரை செய்வர். அது போலத் திருவடி யாத்திரைகாரராகிய நாம் எல்லோரும் ஒருவரோடொருவர் நீதியாயும் அன்பாயும் வாழுதல் வேண்டும்.

திருவடி யாத்திரைப்பற்றி மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய ‘யாத்திரைப் பத்து’ என்னும் பதிகம் திருவாசகத்திலுள்ளது. அதிலுள்ள பாடல் ஒன்று வருமாறு:-

‘தாமே தமக்குச் சுற்றமுந்
தாமே தமக்கு விதிவகையும்
யாமா ரெமதார் பாசமார்
என்ன மாய மிவை போகக்
கோமான் பண்டைத் தொண்டரொடு
மவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்க னாள்வான் பொன்னடிக்கே’


ங. கடவுள் வழிபாடு

கடவுளைடை திருவடிகளை அடைதற்காகவே நாம் பிறவி எடுத்தோமாதலால், அத்திருவடிகளைச் சிந்தித்தலும் துதித்தலும் வணங்குதலுமே நமது முக்கியமான கடமையாகும். ஊடம்பு நயப்படுதற்கு உணவும், மனம் நயப்படுவதற்குக் கல்வியும் வேண்டப்படுதல் போல ஆன்மா நயப்படுவதற்குக் கடவுள் வழிபாடு வேண்டப்படும். ஊடம்பும் மனமும் ஆன்மாவின் கருவியாயுள்ளவை. கருவிகளிலும் பார்க்கக் கருவிகளையுடையவன் மேவலானவன். ஆதலால், உடம்பிலும் மனத்திலும் மேலானதே ஆன்மா ஆகவே, உடம்பை நயப்படுத்துவதற்கு வேண்டிய கல்வியிலும் மேலானது. ஆன்மாவை நயப்படுத்துவதாகிய கடவுள் வழிபாடு அன்றியும், இவைகள் ஆன்மாவுக்கு கருவியாயிருத்தலால், இவற்றின் முக்கியமான தொழில் ஆன்மாவுக்கு வேண்டிய கடவுள் வழிபாட்டில் ஈடுபடுதலேயாம். திருக்கோயிலை வலம் வந்து சுவாமிக்கு பூவைசாத்தித் தோத்திரம் செய்யாத உடம்பினாற் பயனில்லை என்றார் திருநாவுக்கரசு நாயனார். ‘கடவுளுடைய திருவடினளைத் தொழுதற்குத் துணையாய் நில்லாத கல்வியினாற் பயனில்லை’ என்றார் திருவள்ளுவ நயனார்.

“ஆக்கையாற் பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையாலட்டிப் போற்றி என்னாதவிவ்
வுhக்கையாற் பயனென்.”

- திருநாவுக்கரசு நாயனார்.

“கற்றதனா லாயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்”

- திருவள்ளுவ நாயனார்.
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 38

https://inthu.forumta.net

Back to top Go down

சைவசமய சாரம் Empty Re: சைவசமய சாரம்

Post by Admin Thu Oct 29, 2009 5:11 pm

கடவுள் வழிபாட்டிற்கு உரிய நேரங்கள் காலையும் மாலையுமாம். இவ்வழிபாடு பலவாறாகச் செய்யப்படுகின்றது. சிலர் தேவாரம், திருவாசகம் முதலிய அருட்பாக்களைப் பாடிக் கடவுளைத் தோத்திரம் செய்து தியானித்துச் சிந்தித்து வணங்குவர். வேறு சிலர் இவற்றேடு திருஐந்தெழுத்தை ஓதவர். சுப்பிரமணியர் தொண்டர்கள் திருப்புகழ் முதலிய அருட்பாக்களையும் திருஆறெழுத்தையும் ஓதுவர். வேறு சிலர் சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளுள் ஒன்றுக்கு பூசை செய்வர். இன்னுஞ் சிலர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபடுவர்.

கடவுளை நர் தரிசிக்கும் போதும் பூசிக்கும் போதும் “எங்கும் வியாபகமாயுள்ள இறைவனே! சிறியேனுடைய வழிபாட்டிற்காக இங்கு எழுந்தருளியிருக்கும் இப்பெருங் கருணையை நான் எவ்வாறு துதிப்பேன்; உன்னுடைய திரு முன்னிலையில் நின்று உன்னுடைய கருணையைப் பருகும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததே உன்னை நான் மறந்து விடுகிறேனே!”

பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமா மம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனே.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
வுன்னடி யென் மனத்தே
வழுவாதிருக்க வரந்தர
வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள்
செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
மேவல்வைத்த தீவண்ணனே

என்று அந்த அந்த நேரரம் மனத்திலே வருவனவற்றைச் சொல்லி ஆனந்திப்போம். கடவுள் வழிபாடு இவ்வளவோடு நில்லாமல் எமது பிற செயல்களிலும் செறிந்திருக்கின்றது. நித்திரை விட்டெழும்பும் போது ‘சிவ சிவ’ என்று சொல்லி எழுந்திருக்கிறேம். உடனே வாய்கழுவி ‘சிவ சிவ’ என்று சொல்லித் திருநீறு பூசுகிறேம். குளிக்கும்போது கடவுளைச் சிந்திக்கிறேம். சாப்பிடும்போது கடவுளுக்கு நிவேதித்துச் சாப்பிடுகிறோம். சாப்பாடு முடிந்தவுடனே ‘சிவ சிவ’ என்று சொல்லித் திருநீறு பூசுகிறோம். வெளியே போகும் போதும் அப்பயே செய்கிறேம். நித்திரைக்கு போகும்போது சிவபிரானைத் தோத்திரித்துத் திருஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு உறங்குகிறோம்.

கடவுள் வழிபாடு நமது ஒழுக்கத்தையும் சீர்படுத்தக் கூடியது. தீய ஆசைகளேனும் தீய எண்ணங்களேனும் எழும்போது சிவசிந்தனை செய்தால், அச்சிந்தனை இவற்றை கருக்கி மீளவிடாமல் அழிந்து விடும். அது மனத்தைதைத் து}யதாக்கி இறைவன் எழுந்தருளியிருத்தற்குத் தகுதிவாய்ந்த இடமாக்கும். இவ்வுண்மையை,

‘தேடிக் கண்டுக்கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித்தே டொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டு கொண்டேன்.

நாடி நாரண னான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லாரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் னெஞ்சு ளிருக்கவே.

என்னும் திருநாவுக்கரசு நாயனார் திருவாக்குகளிற் காண்க.

நாம் எதை அதிகமாகச் சிந்திக்கின்றோமோ, அதில் நமக்கு உறுதியான பற்று உண்டாகின்றது. கள்ளை அதிகமாக நினைக்கிறவனுக்குக் கள்ளுண்ணல் ஒரு பைத்திமாகின்றது அறிவிலே அதிகமான விசாரமுள்ளவனுடைய மனம் கல்வியிலன்றி வேறென்னிலும் சொல்லாது. சங்கீதத்தை அதிகமாகச் சிந்திப்பவன் சங்கீத மயமாகின்றான். கடவுளிலே சிந்தனையைச் செலுத்துபவன் கடவுளின் அருள்மய மாகின்றான்.

“நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடை யெம் மாதீயென்று
மாரூரா வென்றென்றே யலறா நில்லே”


ச. நல்வினைதீவினைகள்.

கடவுள் எல்லா உயிர்களுக்கும் பரம பிதா. ஆதலால், மற்றைய உயிர்கள் யாவும் நமக்குச் சகோதரர்கள்; நமது அன்புக்கும் ஆதரவுக்கும் உரிமையுடையவர்கள். நாம் இதை முற்றாக மறந்து, சிலரை முற்றாக வெறுக்கின்றோம்; வேறு சிலரைப் பகைக்கின்றோம்; சிலஉயிர்களுக்கு துன்பம் செய்கின்றோம்; சிலவற்றை கொடுக்கின்றேம். இப்படி முறைகேடாய் நாம் நடத்தற்குக் காரணம் நமது ஆசைகள். ஈசைகள் உண்டாதற் குக் காரணமாயுள்ளது. நம்மை மயக்கிக் கொண்டிருப்பதாகிய ஆணவம்.

ஆசைகளை நாம் எல்லைப்படுத்தி வைத்துக் கொள்வோமாயின் மற்றைய உயிர்களைச் சகோதரர்களாகப் பாவித்தல் இலகுவாய்க் கைகூடும். நமக்குப் பொருளிலே ஆசை உண்டு. இந்த ஆசைக்கு எல்லையாய் இருக்கவேண்டியது நாம் நன்முயற்சியாற் சம்பாதிக்கும் பொருளேயாம். ஆந்த எல்லையைக் கடந்து பிறர் பொருளிலே இந்த ஆசை செல்லுதல் தகாது. நமக்கு உணவிலே ஆசை உண்டு. இந்த ஆசைக்க எல்லையா யுள்ளது பிறர் உயிர்களை வருத்தாமல் வரும் உணவுகளாம். அவையாவன: அரிசி முதலிய தானியங்களும், காய்கனி, கிழங்கு முதலியவைகளுமாம். இந்த ஆசையானது மீன், விலங்கு, பட்சி முதலியவற்றின் ஊனிலும், இவற்றுட் சிலவற்றின் கருவாயுள்ள முட்டைகளிலும் சொல்லலாகாது. நும்முடைய கல்வியாசை விவாக எல்லையுள் அடங்கி நிற்கவேண்டியது; அப்பாற் செல்லுதல் தகாது.

ஆசையானது எல்லையைக் கடக்கும்போது நாம் செய்யும் செயல் தீவினையாகும். தீவினை செய்பவர்களுக்கும் கடவுள் இப்பிறவியிலேனும் மறு பிறவியிலேனும் துன்பமான வாழ்க்கையைக் கொடுத்தருளுவார். இப்பிறவியிலே குருடாய்ச் செவிடாய் நொண்டியாய்ப் பிறக்கிறவர்களும் பிறந்த பின்பு வறுமையாலும் நோயினாலும் அறிவின்மையாலும் வருந்துகிறவர்களும் முற்பிறவியிலே தீவினை செய்தவர்களாம். இவர்கள் வருந்துவதைக் காணும்போது நாம் தீவினை செய்ய அஞ்சுகின்றோம்.

வலிய ஆசைகள் எல்லையைக் கடக்கும்போது அவைகளை அடக்குதல் அரிது. ஆதலால், அவைகள் எல்லையைக் கடக்க மாட்டாத விதமாக நம்மைப் பழக்கி வருதல் வேண்டும். அப்படியான பழக்கத்தை நாம் கைக்கொண்டுடால் நமது மனம் தீய வழியிலே செல்லமாட்டாது. இப்பழக்கத்தைச் சிறு வயதிலேயே மேற்கொள்ளுதல் எளிது. சின்ன வயதிலே சத்தியம், நேர்மை, மன அடக்கம், மன உறுதி, மனத் திருப்தியாகிய இவற்றைப் பழகிக் கொண்டால், இறக்கும் வரைக்கும் இவைகள் நிலைத்திருக்கத் தக்கவை. அறப்பற்றும், பிறஉயிர்களில் இரக்கமும், யாவரும் கடவுளின் குழந்தைகள் என்ற எண்ணமும் உறுதிப்பட்டால் ஆசைகள் தாமாகவே அடங்கி நிற்கும்: அப்படி அடங்கி நின்றால் நாம் தீவினைகளைச் செய்யமாட்டோம்.

நல்லவர்களுடைய சரித்திரங்களைப் படித்தலும் கேட்டலும், அவர்களை நயத்தலும் தாய் தந்தை ஆசிரியர் முதலியோருக்குப் பணிந்து நடத்தலும், அவர்களுடைய அன்பை விரும்புதலும், தீவினை செய்யாமைக்குத் துணையானவைகளாம். எங்கும் நிறைந்திருப்பவரும் எல்லாம் அறிபவரும் நமது நெஞ்சிலே எப்போதும் வீற்றிருப்ப வருமாகிய சிவபிரானை வணங்கிப் பணிந்து நடத்தலே தீவினையினின்றும் நீங்குதற்குச் சிறந்த சாதனமாம்.

அறிவாளிகள் ஆசைகளை இலகுவாக்களைந்து விடுவார்கள். நமது உடம்பும் மற்றைய பொருள்களும் இந்த உலனமும் மாயையால் ஆக்கப்பட்டவை; மாயையையும் கைவிட்டால்தான் நாம் கடவுளுடைய திலுவடியை அடையலாம்; ஆதலால், மாயை நம்மால் விலக்கப்பட வேண்டிய பொருள் நாம் ஆசைப்படும் பொருள்க்ளெல்லாம் மாயை யிpலிருந்து தோன்றியவை ஆதலால் இப்பொருள்களிலே ஆசைகொள்ளுதல் தவறாகும். அன்றியும், ஆன்மாவானது மாயையிலும் பார்க்கக் கோடாநுகோடி மடங்கு மேலான பொருள், ஆதலால் அது மாயைப்பொருள்களாகிய பொன்னுக்கும் புலத்துக்கும், பூணுக்கும் புலாலுக்கும், பேருக்கும் பெருமைக்கும் அடிமையாதலால் தகாது என்று கருதி அறிவாளிகள் ஆசைகளை அறுப்பார்கள்.

இனி நல்வினையாவது யாதெனில்:- நாம் கடவுளிற் கொண்ட அன்பிலும் மற்றைய உயிர்களிற் கொண்ட இரக்கத்தினாலும் உந்தப்பட்டு நாம் செய்யும் நற்செயல்களாம். ஆவையாவன:- கடவுள் வழிபாடும், இன்சொல்லும், வறியவர்களது பசிநோய்களைத் தீர்த்தலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்தலும், நற்போதனை செய்தலும் இவைபோல்வனவுமாம். நல்வினை செய்பவர்களைக் கடவுள் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் சுகமாக வாழவைப்பார். ஆதனால் அவர்களுக்கு நல்வினையிலுள்ள பற்று மேலும் மேலும் வளர்ந்து ஓங்கும்; ஆணவ மறைப்புக் குறைந்து குறைந்து போகும்; மெய்யறிவு ஏறிஏறி வரும்.

தீவினை செய்பவர்களுக்குக் கடவுள் துன்பத்தை ஊட்டியருளுவார். அத் துன்பத்தினிலே அவர்களுக்குத் தீவினையில் வெறுப்பும் நல்வினையிலே விருப்பும் உண்டாகும். ஆதனால் ஆணவ மறைப்புக் குறையும்; மெய்யறிவு வளரும்.

“கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற்
குத்திரம் கோள்களவு
குல்லாமற் கைதவ ரோடிணங்
குhமற் கனவிலும்பொய்
சொல்லாமற் சொற்களைக் கோளாமல்
தோகையர் மாயையிலே
சொல்லாமற் செல்வந் தருவாய்
சிதம்பர தேசிகனே”


ரு. சைவ வாழ்க்கை

நாம் விரும்பிய ஒன்னைப் பெறும்போது நம் மனதிலே இன்பம் உண்டாகின்றது. நாம் மாம்பழம் தின்ன விரும்பும்போது அது கிடைக்குமாயின், நாம் இன்புறுகின்றோம். கள்ளுணவை விரும்புகிறவன், அதைப் பருகும்போது இன்புறுகின்றான். அன்றியும், நாம் விரும்பமாட்டாத ஒன்று நம்மைச் சேரா விட்டாலும் நாம் இன்புறுகின்றோம். களவு செய்தவன் தப்பி விட்டானாயின் மிகவும் சந்தோ~ப்படுகிறான்.

இப்படியின்றி, நாம் விரும்பிய ஒன்று கிடையாவிட்டாலும் விரும்பாதது வந்து சேர்ந்தாலும் துன்பம் உண்டாகின்றது. எனக்காயினும், என்னைச் சேர்ந்தவர்களாயினும், என்னுடைய பொருளுக்காயினும் இடர் நேர்ந்தால் துக்கம் உண்டாகின்றது. யாராயினும் இடர் செய்தால் அவரிடத்திலே கோபம் உண்டாகின்றது. ஏதாயினும் இடர் வரப்போகிறதென்று கண்டால் அச்சம் உண்டாகின்றது.

சைவ வாழ்க்கையிலே துன்பத்துக்காயினும், துக்கத்துக்காயினும், கோபத்துக்காயினும், அச்சத்துக்காயினும் இடம் வராது. பச்சை கண்ணாடியை அணிந்து கொண்டு எதைப்பார்த்தாலும் அது பச்சையாகவே தோன்றும் வெண்மையான பாலும், செம்மையான இரத்தமும், நீலமான ஆகயமும், கரியதாகிய காகமும் பச்சையாகவே தோன்றும் அதுபோல, சைவமாகிய கண்ணாடியாற் பார்த்தால், யாவும் உவப்பானவைகளாகவே தோன்றும்; நான் விரும்பிய பொருள் கிடையாவிடில் துன்பமில்லை; எனது கப்பல் ஆழ்ந்து போனால் துக்கமில்லை; என் குழந்தை இறந்துபோம் என்று அஞ்சுவதில்லை; என் பயிரை அழிப்பவனைத் தடுத்தலும் கண்டித்தலு மேயன்றிக் கோபித்தலில்லை.

சைவசமயத்தின்படி நாம் ஆணவமென்னும் வியாதியினாலே பீடிக்கப்பட்டிக்கிறோம். இந்த வியாதியைத் தீர்க்கும் வைத்தியர் சிவபெருமான்; ஆதலால் அவருக்கு “வைத்திய நாதன்” என்று பெயர். நோயாளி தனக்கு பொருந்தாத உணவுகளை விரும்புதல் உண்டு ஆயினும் வைத்தியன் அந்த உணவுகளைக் கொடுக்க மாட்டான். அதுபோல நமக்கு ஆகாத பொருள்களை நாம் விரும்புதல் உண்டு வைத்தியநாதராகிய கடவுள் அவற்றை நமக்கு அருளமாட்டார். ஆதலால், நாம் விரும்பிய பொருள் நமக்கு கிடையாவிடில், அது நமக்கு ஆகாததென்று உணர்ந்து, அது கிடையாமற் போனதைப்பற்றி நாம் சந்தோசப்படல் வேண்டும். நோயாளி விரும்பமாட்டாத பலவற்றை வைத்தியன் அவனுக்குச் செய்கிறான்; ஆமணக்கெண்ணெய் போன்ற கசப்பானவற்றறை உண்ணச் செய்கிறான்; பெரிய கொப்புளத்தைக் கத்தியினாலே கீறி வேதனையை ஆக்குகிறான்; அதுபோல, சிவபிரானாகிய வைத்தியநாதர் நாம் விரும்பமாட்டாதவற்றை நமக்குச் சேர்த்தலும், கொடிய வேதனைகளை ஆக்குதலும் நமது ஆணவமாகிய நோயை நீக்கி நம்மைச் சுகமாக வாழும்பாடி வைத்தற்கேயாம். ஆதலால், நாம் முயற்சிகளை கடந்து நாம் வேதனைகளில் அகப்பட்டாலும், அவைகள் நமது நன்மைக்காகக் கடவுளால் அருளப்பட்டவை என்பதை உணர்ந்து இவைகளைப்பற்றி இன்புறுதலே தக்கதாம். எனது கப்பல் ஆழ்ந்து போனதும், குழந்தை இறந்துபோவதும் நன்மையானவைகளே. ஆவைகள் எனக்கு எப்படி நன்மையாகும் என்பதை நாம் அறிய வேண்டியதில்லை. ‘யாவும் அவருடைய செயலே; அவர் செய்வதெல்லாம் நன்மையே’ என்ற நம்பிக்கை உறுதியாயி ருந்தால், அப்பர் சுவாமிகள் பாடியருளியபடி,

“நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தி விடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தூமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரனற்
சுங்கவெண் குழை யோர் காதிற்
கோமாற்கே நாம் என்றும் மீளா வாளாய்க்
கோய்ம் மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே”

“கண்ணவெண் சந்தனச் சாந்தும்
சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை உடையும்
வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முரண் ஏறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை”


என்று எப்போதும் ஆநந்தமாய் வாழலாம். துக்கம், கோபம், அச்சம் ஆகிய மூன்றும் உடலுக்கே தீமையானவை. என்னுடைய கப்பல் ஆழ்ந்து போனால், பெருமுயற்சி பொருளைத் தேடி நட்டத்தைத் தீர்த்தாலும் எமக்கு யாராவது இடர் செய்ய வரும்போது கோபம் கொள்ளுதலன்றி அதனைத் தடுத்தலும் குழந்தையானது கொடிய நோயின் வாயில் அகப்பட்டால் அஞ்சுதலின்றி நல்ல வைத்தியம் செய்தலும், அது இறந்து போனால் “பிறந்தவர் இறக்கை திண்ணம்” என்பதை கண்டு மனங்கலங்காதிருத்தலும் சைவர்களல்லாதாரும் செய்யத் தக்கவைகளாம்.




கூ. ஐசவ ஒழுக்கங்கள்

க. சைவ ஒழுக்கங்களுள் இன்றியமையாதது திருநீறு அணிதல். ஆதை அணியும் போது சிவபிரானை நினைத்தலும் திருவைந்தெழுத்தை உச்சரித்தலும் அவசியமானவை.

“கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுன தருளால்
திருவாய் பொலியச் சிவாயநமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே”

உ. திருவைந் தெழுத்தை ஆறுதலாயும் அமைதியாயும் அன்போடு ஒவ்வொரு நாளும் ஓதுதல்.

“காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஒது வார்தமை நன்னெறி குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நூதன் நாமம் நமச்சி வாயவே”

ங. தேவாரம் அல்லது திருவாசகம் ஒவ்வொருநாளும் ஓதுதல்: திருவாசக புத்தகம் ஒன்று வீட்டில் வைத்துக்கொள்ளுதல்.

ச. சிவபெருமான், உமாதேவியார், விநாயகர், வீரபத்திரர், சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளுள் ஒன்றிலே விசே~ பற்றுவைத்து நாள்தோறும் தியானித்துத் தோத்திரம் சொல்லி வணங்குதல். சிவத்தியானத்துக்கு நடராச வடிவம் மிகவும் பொருத்தமானது.

“தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோத முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு”

அதிலுள்ள ஒவ்வொன்றும் அரிய உண்மைகளை விளக்கி, நம்மை நல்வழியிற் செலுத்தத் தக்கது. ஒரு தொழிலைக் குறிக்கின்றது. கடவுள் நம்மைப் படைத்தது நாம் மெய்ப்பொருளாகிய அவரை அடைந்து பேரானந்தத்தைப் பெறுதற்காக என்பதை அது காட்டத் தக்கது. ஆதலால் அதைக்காணும்போது.

“உற்றாரை யான் வேண்டே னூர்வேண்டேன்
பேர்வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவு
மினியமையுங்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன்
குரை கழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக
வேண்டுவனே”

என்று எண்ணலாம். அவருடைய வேறெரு திருக்கரம் அபயகரம் எனப்படும். அது “நாம் உன்னைக் காப்போம், ஒன்றுக்கும் பயப்படாதே” என்னும் குறிப்புடையது.

“மண்பா தலம்புக்கு மால்கடன்
மூடிமற் றேழுலகும்
விண்பாரிசைகெட் டிருசுடர்
வீழிணு மஞ்சனெஞ்சே
திண்பா மைக்கொன்று கண்டோக்
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட்
சுடரான் கழலிணையே”

என்னும் மனவுறுதியை ஆக்கத்தக்கது. திருவடிகளுள் ஒன்று முயலகனை மிதித்து ஆணவத்தை நசித்தலைக் குறிக்கும். அதை நாம் காணும் போது அவருடைய திருவடித் துணையைக் கொண்டு ஆணவத்தாதாலுண்டாகும் ஆசைகளை அடக்கவேண்டும் என்னும் விருப்பம் உண்டாகும். மற்றைத்திருவடி அவர் தம்மைத் தம்மோடு சேர்த்துத் தம்மைப்போல் ஆக்குவார் என்பதைக் குறிக்கும். இது:-

“புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
புயங்கன் தாளே புந்திவைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையு
மினியோ ரிடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச்
சென்று சிவன்றான் வணங்கிநாம்
நிகழு மடியார் முன்சென்று
நெஞ்ச முருகி நிற்போமே”

என்னும் மனப்பான்மையை ஆக்கத்தக்கது.

ரு. சிவனடியார்களது திருவநாட்களைக் கொண்டாடி அவர்களுடைய திருச்சரித் திரங்களைச் சொல்லி அல்லது கேட்டு அவர்களை வழிபடல்.

“தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் மடியேன்
திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே யென்னாத இயற்பகைக்;;;கு மடியேன்
இளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு கடியேன்
விரிபொழில்சூழ் குன்னையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
அரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.”

சு. நாள்தோறும் அல்லது வாரந்தோறும் கோயிலுக்கு போதல்.

எ. சைவசமய முறைப்படி எப்போதும் நடக்க மாட்டாதவர்கள் வாரத்திற்கொரு முறையேனும், பக்கத்திற்கொரு முறையேனும், மாசத்திற்குகொரு முறையேனும், முறைப்படி தவறாது நடத்தல். இப்படி நடத்தல் விரத நாட்களிற் பொருந்தும். மாசிமாதத்தில் வரும் சிவராத்திரி விரதம் சைவர் யாவரும் அனுட்டிக்கத்தக்கது.

அ. நாம் ஒருவரைக் காணும்போது அவர் சிவபிரானது திருவடிகளைச் சோருதற்கு யாத்திரை செய்பவர் என்ற எண்ணமே தமது மனத்திலே முதல் உண்டாதல். ஆவர் தம்மிடம் வந்த தொழிற்றொடர்பு இரண்டாவதாக எண்ணத்தக்கது.

எ. சைவத்தின் மேன்மை

க. எல்லா ஆன்மாக்களும் மோட்சத்தைப் பெறுமென்று சைவசமயம் மாத்திரமேயாம்.

ஊமாபதி சிவம் உயிர்களைவ குக்கும்போது
(1) இதுவரையில் மோட்சத்தைப் பெற்றவர்கள்.
(2) இனிமேல் மோட்சத்தைப் பெறு வோர்கள் என இரண்டாகப் பிரிக்கின்றார். “துறந்தோர், துறப்போர்” என்பது அவருடைய திருவாக்கு மற்றைய சமயத்தவர்கள் ‘தங்கள் தங்கள் சமயத்தவர்களே ஈடேறுவார்கள் என்றும் வேறு சமயத்தவர்கள் நித்திய நரகத்தை அடைவார்கள்’ என்றும் சொல்லுகிறார்கள்.

உ. ஒரு பள்ளிக்கூடத்தை ஆக்குபவர் மாணாக்கர்களது அறிவுக்கு தக்கதாக ஒன்றுக்கு ஒன்று மேற்ப்பட்ட பல வகுப்புக்களை வைப்பது போல. கடவுள் ஆன்மாக்களது நிலைக்கு தக்கதாக ஒன்றுக்கொன்று மேற்பட்ட பல சமயங்களை ஆக்கினார். ஏன்று சொல்லுவது சைவசமயம் மாத்திரமேயாம். “அறுவகை நெறிகளும் பிறவுமாக்கிய இறைவி” என்றார். கச்சியப்பசிவம். அறுவகை நெறி என்றது அறுவகைச்சமயம். இவை நான்கு வகைப்படும்.

கீழ்வகுப்பாகிய அறுவகைச் சமயங்கள் புத்த சமயம் முதலியவை. இவற்றுட்பல, கடவுள் உண்டென்று சொல்வதில்லை. இவற்றுக்கு மேற்பட்ட அறுவகைச் சமயங்கள் ஏகான்மவாதம் முதலியவை இவற்றுட்பல ஆண்மாவின் வேறாகக் கடவுள் இல்லை என்று கூறும்.

இவற்றுக்கு மேற்பட்ட அறுவகைச் சமயங்கள் சாக்தம் முதலியவை. இவைகள் கூறும் கடவுளின் இலக்கணம் நிறைவானதன்று. இவற்றுக்கு மேற்பட்ட அறுவகைச்; சமயங்கள் சிவசமவாதம் முதலியவை. இவற்றுக்கும் சைவத்திற்கும் வேறுபாடு அற்பமானது. இவற்றுக்கு மேற்பட்டது சைவசமயமாம். மற்றைய சமயத்தவர்கள் தங்கள் தங்கள் சமயமே கடவுளால் ஆக்கப்பட்டதென்றும் ஏனைய சமயங்கள் கெட்ட சமயங்கள் என்றும் சொல்லுவார்கள்.

கூ. எந்தச் சமயத்தவரும் தமது சமயக் கடவுளை வழிபடும்போது அவ்வழிபாட்டைக் கடவுள் ஏற்று அருள் செய்வாரென்று சொல்வது சைவசமயம் மாத்திரமே.

“யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்மதாம் வருவர்”

என்றார் அருணந்தி சிவம்.

ச. மோட்சம் அடைதற்குச் சாதனமாகச் சமய அனுட்டானத்தைப் படிப்படியாக நிரைப்படுத்தியுள்ளது சைவசமயம் மாத்திமேயாம்.

சுர்வகலா சாலைகளிலே இளம்பட்ட வகுப்புகள் (பசயனரயவந உழரசளந) முதுபட்ட வகுப்புக்கள் (pழளவ - பசயனரயவந உழரசளந) என இரண்டு பெரியபடிகள் இருப்பது போலச் சைவசமத்திலே உபாய மார்க்கம், உண்மை மார்க்கம் என இரண்டு பெரும்படிகள் உண்டு.

உபாய மார்க்கமாவது உலகப்பற்றேடு செய்யும் சைவ அனுட்டானங்கள். நம்மைப் போன்றவர்கள் சைவசமய அனுட்டானங்களைச் செய்வாராயின் அவர்கள் உபாய மார்க்கத்தவராவர். ஊண்மை மார்க்கமாவது உலகப்பற்றுச் சிறிதுமின்றிச் செய்யப்படும் வைச அனுட்டானங்கள். தாயுமானவர் முதலியோர் உண்மை மார்க்கத்தவர். இளம்பட்ட வகுப்புக்கள் முதலாண்டு வகுப்பு முதல் நான்காமாண்டு வகுப்புவரையும் நாலுபடிகளாதல் போல, உபாயமார்க்கமானது உபாயச்சரியை, உபாயக்கிரியை, உபாயயோகம், உபாயஞானமென நான்கு படிகளையுடையது. முதுபட்டப் படிப்பிலே பலபடிகள் இருத்தல்போல (ஆ. ளுஉ. Ph. னு. ளுஉ. னு) உண்மை மார்க்கத்திலே, உண்மைச் சரியை உண்மைக் கிரியை உண்மையோகம் என மூன்று படிகள் உள முதுபட்டப் படிப்பில் உந்நத நிலையடைந்தோர் இராசசபை அங்கத்தவராதல் போல (கு. சு. ளு) உண்மை. மார்க்கத்தில் உந்நத நிலையடைந்தோர் உண்மை ஞானமாகிய உந்நத படியை அடைவர்.

இவற்றுள் சரியையாவது - சிவாலயத் தொண்டு செய்தலும், விநாயகர் முதலிய உருவத் திருமேனிகளுள் ஒன்றுக்குப் பூஜை செய்தலுமாம். கிரியையாவது சிவலிங்க பூஜை செய்தல். யோகமாவது - சிவயோகம். ஞானமாவது ஞான நு}ல்களை ஞானாசாரி யரிடம் கேட்டு அறிந்து சிவஞானத்தைப் பெறுதல்.

“சங்கரனை யடையும்
நுன்மார்க்கம் நாலு அவைதாம்ஞான, யோன, நற்கிரியா, சரியை
என நவிற்றுவதும் செய்வர்”

என்றார் அருணந்திசிவம்.

மற்றைய சமயங்கள் இவ்வாறாக படிகளொன்றுமின்றி எளிதிலே மோட்சத்தைத் தருவோம் என்கின்றன. அப்படியாயின் அவர்களுடைய மோட்சம் என்ன பெறும்!

ரு. எல்லாவிதமான தீவினைகளையும் விளக்குவது சைவசமயம் மாத்திரமேயாம். ஏனைய தீவினைகளோடு கள்ளுண்ணல், புலாலுண்ணல், கொலையாகிய மூன்றையும் விலக்குவது சைவசமயம்.

புலாணுண்ணலைப் புத்தசமயம் விலக்கவில்லை. புலாலுண்ணலையேனும் கொலையையேனும் இஸ்லாம் சமயம் விலக்கவில்லை; புலாலுண்ணலையேனும், கள்ளுண்ணலையேனும் கொலையையேனும் கிறிஸ்து சமயம் வலக்கவில்லை.

கூ. ஆன்மாக்கள் ஆணவமென்னும் வியாதிpளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள். என்றும் அவைகள் செய்யும் பிழைகள் யாவும் அந்தநோயினால் வருவன என்றும் அவைகள் இயல்பாக நல்லவை என்றும், கடவுள் அந்த நோயைத் தீர்க்கும் வைத்தியநாதர் என்றும், அவர் ஆன்மாக்களுக்கு ஊட்டும் இன்ப துன்பங்கள் அந்றோயைத் தீர்க்கும் மருந்துகள் என்றும் சொல்வது சைவ சமயம் ஒன்றேயாம்.

“அருளினால் உரைத்த நு}லின்
வுழிவாh ததன்மஞ் செய்யின்
இருளுலா சிரயத் துன்பத்
திட்டிரும் பாலம் தீர்ப்பன்
பொருளுலாம் சுவர்க்க மாதி
போகதடதாற் புணியம் தீர்ப்பன்
மருளுலாம் மலங்கள் தீர்க்கும்
மருந்திவை வைத்திய நாதன்”

என்றார் அருணந்தி சிவம்.

மற்றைய சமயங்கள் மனிதர்கள் இயல்பாகக் கெட்டவர்கள் என்றும், கடவுள் அவர்கள் செய்யும் குற்றத்துக்காக அவர்களைத் தண்டிக்கும் நீதிபதி என்றும் கூறும்.

எ. புறச்சமயத்தவரை வலிந்து இழுக்காதது சைவசமயம் மாத்திரமேயாம் மற்றைய சமயத்தவர்கள் ஏனையசமயத்தவர்களைத் தங்கள் சமயத்துக்கு இழுப்பதே தமது பெரிய முயற்சியாகக் கொள்வார்கள்.

‘மனிதர்கள்! இங்கேவம் ஒன்று சொல்லுகேன்
கனிதந்தாற் கனி உண்ணவும் வல்லிரே?
புனிதன் பொற்கழ லீசன் எனுங்கனி
இனிது சாலவும் எசற் றவர்கட்கே’

- திருநாவுக்கரசு நாயனார்

திருச்சிற்றம்பலம்

மழை வழங்குக மன்னவ னேங்குக
பிழையில் பல்வள னெல்லாம் பிறங்குக
தழைக வஞ்செழுத் தோசை தரையெலாம்
பழைய வைதிக சைவம் பாக்கவே.

திருச்சிற்றம்பலம்.

நன்றி யாழ் நுலகம்
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 38

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum