இந்துசமயம்


Join the forum, it's quick and easy

இந்துசமயம்
இந்துசமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

"அவன் என்னிடமே வதிந்து என்னிடமே செயல்புரிகிறான்" - ஸ்ரீ அரவிந்தர்

Go down

"அவன் என்னிடமே வதிந்து என்னிடமே செயல்புரிகிறான்" - ஸ்ரீ அரவிந்தர் Empty "அவன் என்னிடமே வதிந்து என்னிடமே செயல்புரிகிறான்" - ஸ்ரீ அரவிந்தர்

Post by Admin Sun Feb 07, 2010 2:31 pm

மு‌க்த‌னி‌ன் ல‌ட்சண‌ங்க‌ள்!

இறை பணி புரியும் முக்தனைப் பற்றி, "அவன் எவ்வண்ணம் வாழினும் எச்செயல்புரினும் அவன் என்னிடமே வதிந்து என்னிலேயே செயல்புரிகிறான்" என்று கீதையில் பகவான் கூறுகிறான்.


மனித அறிவு விதிக்கும் விதிகள் முக்தான்மா விஷயத்தில் பொருந்தா. மனிதர்கள் தங்களுடைய மனப்பழக்கங்கள், மனச்சாய்வுகள், முன் முடிவுகளுக்கு ஏற்றபடி வகுத்துக் கொண்டுள்ள புறச்சாதனை முறைகளைக் கொண்டு முக்தனை எடை போட முடியாது. பிழைபடக் கூடிய இந்த நீதிமன்றங்களின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவன் அவன்.

அவன் சந்நியாசியின் காவி உடையை அணிந்திருக்கிறானா அல்லது இல்லறத்தானின் வாழ்வை முழுமையாக மேற்கொண்டுள்ளானா, அவன் தனது காலத்தை மக்கள் புனிதமானவை என்று கருதும் கர்மங்களில் கழிக்கிறானா அல்லது உலகிலுள்ள பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறானா, புத்தரை, கிறிஸ்துவை, சங்கரரைப் போல் மக்களை நேரே தெய் ஒளிக்கு வழிநடத்திச் செல்லும் பணியை மேற்கொண்டுள்ளானா அல்லது ஜனகரைப் போல் ஓர் இராஜ்ஜியத்தை ஆள்பவனாகவோ ஸ்ரீ கிருஷ்ணனைப் போல் அரசியல் தலைவனாகவோ போர்க்களத்தில் படைகளை நடத்துபவனாகவோ இருக்கிறானா, எதை உண்கிறான், எதைப் பருகுகிறான், அவனது பழக்க வழக்கங்கள் என்ன, அவனது தொழில் என்ன, அவன் வெற்றி பெறுகிறானா தோல்வியடைகிறானா, அவன் செய்வது ஆக்க வேலையா அழிவு வேலையா, அவன் பழைய சமூக, அரசியல் அமைப்பை ஆதரித்து அதைப் பாதுகாக்கிறானா அல்லது புதிய சமூக அரசியல் அமைப்பு ஒன்றை நிலைநாட்ட முயல்கிறானா, அவனது சகாக்கள் பெரிய தர்மசீலர்கள் என்று கருதிக் கொள்பவர்களால் சாதிவிலக்கம் செய்யப்பட்டவர்களா, அவனது வாழ்வும் செயல்களும் அவனது காலத்தவர்களால் நல்லவைகளாகக் கருதப்படுகின்றனவா அல்லது அவர்கள் அவனை மக்களைத் தவறான வழியில் இட்டுச்செல்பவன், சமயத்திலும் ஒழுக்கத்திலும் சமூக அமைப்பிலும் முறைகேடுகளைப் புகுத்துகிறவன் என்று நிந்திக்கிறார்களா என்பதெல்லாம் பொருளற்றது, அதற்கு எவ்வித மதிப்பும் கிடையாது.

அவன் மனிதர்களது நீதியின்படியோ பாமரர் வகுத்த சட்டங்களின்படியோ நடப்பதில்லை. அவன் உள்ளிருந்து பேசும் ஒரு தெய்வக்குரலின் ஆனை வழி நடக்கிறான், வெளிக்குத் தெரியாத ஒரு சக்தி அவனை இயக்குகிறது. அவனது உண்மையான வாழ்வு உள்ளே உள்ளது. அவன் ஆண்டவனில், இறைவனில், அனந்தப் பொருளில் வாழ்கிறான் - இதுவே அவனது வாழ்வு பற்றிய வருணணை.

முக்தாத்மா இன்ன வேலையைத்தான் செய்வான் இந்த விதியைத்தான் பின்பற்றுவான் என்று வரையறுக்க முடியாது. முக்தாத்மா செய்யும் வேலையைப் பற்றிப் பேசும்போது "கர்த்தவ்யம் கர்மா" என்று கீதை கூறுகிறது.
Admin
Admin
Admin

Posts : 90
Join date : 2009-10-05
Age : 38

https://inthu.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum