Latest topics
» மகா சதாசிவன் படம்by அச்சலா Wed Aug 20, 2014 1:40 pm
» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்
by அச்சலா Mon Aug 18, 2014 4:36 am
» கதிர்காமம்
by அச்சலா Mon Aug 18, 2014 4:34 am
» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்
by அச்சலா Mon Aug 18, 2014 4:23 am
» இராமாயணம் வரலாறு
by அச்சலா Wed Sep 11, 2013 12:24 pm
» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்
by அச்சலா Wed Sep 11, 2013 1:38 am
» சங்குகளும் அவற்றின் வகைகளும்.
by அச்சலா Wed Sep 11, 2013 12:11 am
» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
by அச்சலா Tue Sep 10, 2013 11:34 pm
» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு
by அச்சலா Tue Sep 10, 2013 11:19 pm
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - நித்யானந்தர்
Page 1 of 1

எப்பேர்ப்பட்ட நிலையில் வாழ்ந்தால் என்ன?
எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன?
காலையில் எழுந்த உடனே, இனிமையான ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையைவிட்டு எழுப்பவில்லையென்றால், "வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம்!"
வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.
ஜீவன் முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல் இருப்பது, பூமிக்கு மட்டும் பாரமல்ல, அவருக்கு அவர் பாரம்தான்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான பரிசை, யாரோ ஒருவர் கொடுக்கிறார். ஆனால், அதை நீங்கள் உபயோகப்படுத்தாமல் தூக்கி ஓரமாய் போட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் அந்தப் பரிசை மட்டும் அவமரியாதை செய்யவில்லை. கொடுத்தவரையும் சேர்த்து அவமரியாதை செய்கிறீர்கள்.
அதேபோல்
இந்த வாழ்க்கை என்பது...
ஜீவன் முக்தராக வாழ்வதற்காக
இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை.
ஜீவன் முக்தராக வாழவில்லை என்றால், அதை அளித்த இறைவனையும் சேர்த்துத்தான் அவமரியாதை செய்கின்றீர்கள்.
ஜீவன் முக்தராக வாழாமல் இருப்பதற்கு வெளியுலகம் காரணமில்லை.
உள்ளுலகில் நமக்குள்ளே இருக்கும் இடைவெளிதான் காரணம்.
வெளியில் நாம் காண்பிக்கின்ற அந்த புறத்தன்மைதான், அகங்காரம்தான், இருப்பதைவிட அதிகமாகவே காண்பித்துக் கொள்ளத் தூண்டும் பர்ஸனாலிட்டிதான், நமக்குள்ளே இடைவெளியை உருவாக்கும் பெருச்சாளி. மற்றொரு பர்சனாலிட்டி இருக்கிறது. உள்ளுக்குள்ளேயே நாம் நம்மை யாரென்று நம்புகின்ற பர்சனாலிட்டி, உள்தன்மை. இதைத்தான் "மமகாரம்" என்று குறிப்பிடுவார்கள்.
தனியாக ஒரு அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு உட்கார்ந்திருந்தாலும், உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.
உள்ளுக்குள்ளேயே இருக்கும் உலகத்தைப் பற்றியும், நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிற கருத்துக்களும்தான் 'மமகாரம்'.
வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டியில் எப்போதும் இருப்பதைவிட அதிகமாகத்தான் காட்டுவீர்கள். ஆனால், உள்ளே நீங்கள் என்று நம்புகின்ற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதைவிட உங்களை நீங்களே குறைவாகத்தான் நம்புவீர்கள். உங்களின் உள்தன்மை, மமகாரம் உங்களை குறைவாக உங்களுக்குக் காட்டும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டி, 'ஆசையை' அடிப்படையாகவும், உள்ளே உங்களுக்குள் இருக்கின்ற பர்சனாலிட்டி 'அச்சத்தை' அடிப்படையாகவும் வைத்துத்தான் இருக்கும், இயங்கும்.
வெளியில், இருப்பதைவிட அதிகமாகக் காட்டுவோம். ஆனால் உள்ளே உங்கள் திறமையைவிட குறைவாகவேதான் எடை போட்டுக் கொண்டிருப்பீர்கள்.
அதனால்தான் திரும்பத் திரும்ப உங்களை நீங்களே கணித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களைப் பற்றி நீங்களே ஏதேனும் முடிவு செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களை நீங்களே ஒரு குற்ற உணர்ச்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டே இருப்பீர்கள். ஆழ்த்திக் கொண்டே இருப்பீர்கள்... குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இப்படி உங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணமே, இந்த 'மமகாரம்' தான்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.
உள்ளே இருக்கின்ற பர்சனாலிட்டியை, வெளியில் இருக்கின்ற பர்சனாலிட்டியாக மாற்றவதற்கான முயற்சிதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையே மிக நீளமான ஒரு சண்டையாக இருக்கிறது.
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பொருளாதாரமாகக் கூட இருக்கலாம். பொருளாதாரத்துறை என்பது என்னவென்றால், வாணிபம் செய்வது, சமூகசேவை செய்கின்ற துறையாக இருக்கலாம். அல்லது அரசசியலாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் வேறு எந்த வேலை செய்கின்ற துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் மனித வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற மிக நீளமான ஒரு சண்டை மட்டுமே.
வாழ்க்கையில் சண்டை என்றால் சரி செய்துவிடலாம். வாழ்க்கையே சண்டை என்றால் எதுவும் செய்ய முடியாது. யாராலும் காப்பாற்ற முடியாது. உங்களை நீங்கள் மட்டும்தான் இந்நிலையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum